சென்னை: Bayilvan Ranganathan (பயில்வான் ரங்கநாதன்) கவுண்டமணியால்தான் தன்னுடைய வாழ்க்கை போய்விட்டது என ஷர்மிலி கூறிய சூழலில் அதற்கு பயில்வான் ரங்கநாதன் பதிலடி கொடுத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் நகைச்சுவையை மாற்றியவர்களில் கவுண்டமணிக்கு முக்கிய பங்கு உண்டு. அவர் அடிக்கும் கவுண்ட்டர்களும், சில முற்போக்கு கருத்துக்களும் பலரால் ரசிக்கப்பட்டவை. அதேசமயம் அவர் தனது காமெடிகளில் உருவ கேலியை நிறையவே செய்தார் என்ற விமர்சனமும் எழுவது உண்டு. விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கவுண்டமணி ஒரு காமெடி லெஜெண்ட் என்றே இன்றுவரை புகழப்படுகிறார்.
ஷர்மிலி குற்றச்சாட்டு: இந்தச் சூழலில் கவுண்டமணியுடன் பல படங்களில் இணைந்து நடித்த ஷர்மிலி சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருந்தார். அந்தப் பேட்டியில் பேசியிருந்த அவர், “நான் கவுண்டமணியுடன் நடித்துதான் பிரபலம் ஆனேன். அவருடன் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தேன். ஒருமுறை பெரிய ஹீரோவுடன் நடனம் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதில் நடிக்கக்கூடாது என கூறிவிட்டார் கவுண்டமணி.
அவரை கேட்டுதான் புக் செய்ய வேண்டும்: என்னை ஒரு படத்திலோ, பாடலிலோ புக் செய்ய வேண்டும் என்றால் கவுண்டமணியைத்தான் கேட்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டார். இப்படியே தொடர்ந்தால் அது நன்றாக இருக்காது என உணர்ந்த நான் அவருடன் நடிக்க மறுத்துவிட்டேன். அவருடன் நடிக்க மறுத்ததால் எனக்கு வர வேண்டிய பிற பட வாய்ப்புகளையும் அவர் தடுத்துவிட்டார். அவரால்தான் எனது வாழ்க்கையே போய்விட்டது” என கூறியிருந்தார். அவரது இந்தக் குற்றச்சாட்டு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பயில்வானின் பதிலடி: இந்நிலையில் ஷர்மிலியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்திருக்கும் பயில்வான் ரங்கநாதன், “ஷர்மிலி ஒரு குரூப் டான்ஸராகத்தான் தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் 1500 ரூபாய். ஆனால் கவுண்டமணியுடன் நடித்தபோது அவருக்கு 50,000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. கவுண்டமணி இல்லையென்றால் ஷர்மிலி இந்த தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு தெரிந்திருக்கமாட்டர்.
இயக்குநர்களிடம் பரிந்துரைப்பார்: எனக்கு மற்றவர்களைவிட ஷர்மிலியை பற்றி நன்றாகவே தெரியும். கவுண்டமணியை புக் செய்ய வரும் இயக்குநர்களிடம் ஷர்மிலியை போட்டுக்கோங்க ப்பா என சொல்வார். அது ஷர்மிலிக்கும் தெரியும். நான் ஷர்மிலியை தூக்கியதற்காக எனக்கு பட வாய்ப்புகளை கவுண்டமணி தடுத்தார்தான். ஆனால் நான் நன்றி மறக்கமாட்டேன். ஷர்மிலியும் நன்றி மறக்கக்கூடாது.
கவுண்டமணி ஏன் தடுத்தார்: சிரஞ்சீவியுடன் நான் நடனமாடுவதை கவுண்டமணி தடுத்தார் என ஷர்மிலி கூறியிருக்கிறார். தன்னுடைய படத்தில் ஒருவர் நடித்துக்கொண்டிருக்கும்போது இன்னொரு படத்துக்கு எப்படி விடுவார். உடனே கவுண்டமணி தன்னுடைய வாய்ப்பை தடுத்துவிட்டார் என கூறுகிறார். இது நியாயமில்லை. கவுண்டமணியால்தான் நீங்கள் லட்சம் லட்சமாக சம்பாதிக்க செய்தீர்கள். ஃப்ளாட் வாங்குனீங்க. அதையெல்லாம் மறக்கக்கூடாது.
கடவுளே மன்னிக்கமாட்டார்: நீங்கள் ஒருவரை திருமணம் செய்து இரண்டு வருடங்கள் வெளிநாட்டில் வாழ்ந்தீர்கள். பிறகு மீண்டும் இங்கு வந்துவிட்டீர்கள். அதை நீங்களும் என்னிடம் ஓபனாகவே பேசியிருக்கிறீர்கள். என் வாழ்க்கையை கெடுத்ததே கவுண்டமணி என சொல்கிறீர்கள். இது எவ்வளவு பெரிய பொய். 40 வயதுக்கு மேல் கர்ப்பமாகி இருக்கிறீர்கள். நன்றாக குழந்தை பெற்று நிம்மதியாக வாழுங்கள். ஆனால் கவுண்டமணி குறித்து அவதூறு பரப்பாத. கடவுளே மன்னிக்கமாட்டார். அவரைப் பற்றி பேசியதற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேள் ஷர்மிலி” என கூறியிருக்கிறார்.