Kaavaalaa song: அதிரடியாக வெளியான காவாலா பாடல் மேக்கிங் வீடியோ.. சும்மா அதிருதில்ல!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.

வரும் ஆகஸ்ட் 10ம் தேதி படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில், படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர்ஹிட்டடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இந்தப் படத்தில் மேலும் மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராப் உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

காவாலா பாடலின் மேக்கிங் வீடியோ வெளியீடு: நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் அடுத்ததாக ரஜினி -நெல்சன் கூட்டணியில் ஜெயிலர் படத்தையும் தயாரித்துள்ளது. அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் மிரட்டியது. இந்நிலையில் ஜெயிலர் படம் சிறப்பான விமர்சனங்களையும் பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். முன்னதாக கோலமாபு கோகிலா, டாக்டர் என சிறப்பான படங்களை கொடுத்துள்ள நெல்சன், விஜய்யின் பீஸ்ட் படத்தில் சொதப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தொடர்ந்து ரஜினியை நெல்சன் இயக்குவாரா என்ற சந்தேகம் காணப்பட்டது. ஆனால் முன்னதாக அறிவித்தபடியே, அவர் ஜெயிலர் படத்தில் இணைந்தார். இந்தப் படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள நிலையில், ஒவ்வொரு மொழியிலும் முன்னணி நடிகர்களை படத்தில் நெல்சன் இணைத்துள்ளார். மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா என முன்னணி நடிகர், நடிகைகள் படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

படத்தில் ஜெயிலராக ரஜினி நடித்துள்ளார். ஒரே நாளில் நடக்கும் நிகழ்வுகளை மையமாக கொண்டு, படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் நெல்சன். முன்னதாக படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை ஈர்த்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக காவாலா பாடல் வெளியாகி மிகுந்த வரவேற்பையும் வியூசையும் பெற்றுள்ளது. இந்தப் பாடலில் தமன்னா மற்றும் ரஜினி ஆட்டம் போட்டுள்ளனர்.

குறிப்பாக தமன்னாவின் ஆட்டம் படத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் மட்டுமில்லாமல் பிரபலங்களும் இந்தப் பாடலை கொண்டாடி வருகின்றனர். பல பிரபலங்கள் இந்தப் பாடலின் ரீல்சை பதிவிட்டு வருகின்றனர். தமன்னாவும் இதன் ரீல்சை செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு ட்ரெண்டாக்கினார். இதனிடையே, தங்களுக்கு பிடித்த நடிகைகளை வைத்து தமன்னாவின் இந்த வீடியோவை ஏஐ முறையில் மாற்றியமைத்தும் ரசிகர்கள் மகிழ்ந்து வருகின்றனர்.

நேற்றயை தினம் சிம்ரன், காஜல் அகர்வால் போன்றவர்களின் ஏஐ வீடியோக்கள் வெளியான நிலையில், அடுத்தடுத்து நயன்தாரா, சமந்தா, கியாரா அத்வானி போன்றவர்களையும் இந்த வீடியோவில் ரசிகர்கள் ஆட விட்டுள்ளனர். இதனிடையே இந்தப் பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஏராளமான நடனக்கலைஞர்களுடன் பிரத்யேக செட் போடப்பட்டு மிகுந்த மெனக்கெடலுடன் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.