Kawasaki – இந்தியாவில் கவாஸாகி KX65 மற்றும் KX112 பைக்குகள் விற்பனைக்கு வெளியானது

டிர்ட் பைக் மாடல்களான  கவாஸாகி KX65 மற்றும் KX112 ஆஃப் ரோடு சாகசங்களுக்கான விலை முறையே ₹ 3,12,000 மற்றும் ₹ 4,87,800 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிராக் மற்றும் மூடப்பட்ட சாலைகளில் இயக்கும் வகையில் இந்த மாடல்கள் பொது சாலைகளில் பயன்படுத்த இயலாது.

இந்தியாவில் கவாஸாகி KX , KLX என இரண்டு பிரிவில் 2 ஸ்ட்ரோக் மற்றும் 4 ஸ்ட்ரோக் என இரண்டிலும் விற்பனை செய்து வருகின்றது. இந்நிறுவனம் KLX110, KLX140G, மற்றும் KLX450R, அடுத்து KX65, KX100 KX112, KX250 மற்றும் KX450 ஆகியவை கிடைக்கின்றது.

Kawasaki KX65 & KX112

இரண்டு மாடல்களும் இரண்டு ஸ்ட்ரோக் என்ஜின் பெற்று ஹெட்லைட், டெயில் லைட், டர்ன் இண்டிகேட்டர், மற்றும் ரியர்வியூ கண்ணாடி போன்றவை இல்லாத மாடலாகும். குறைந்த பாடிவொர்க், உயரமான முன் ஃபெண்டர், ஃபோர்க் கெய்ட்டர்கள்,  அப்ஸ்வெப்ட் டெயில் பேனல், எக்ஸாஸ்ட் கேனிஸ்டருக்கான மேல்நோக்கிய அமைப்பு மற்றும் வயர் ஸ்போக் வீல் கொண்டுள்ளதாகும்.

21-இன்ச் முன் மற்றும் 18-இன்ச் பின்புற சக்கரத்திலும் டியூப் டயர் கொடுக்கப்பட்டு KX பைக்கில் முன்புற ஃபோர்க், பின்புறத்தில் மோனோ ஷாக் உள்ளது.

KX65 ஆஃப் ரோடு பைக்கில் 64cc, ஒற்றை சிலிண்டர், 2 ஸ்ட்ரோக், லிக்யூடு கூல்டு என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இதற்கிடையில், KX112 112சிசி, ஒற்றை சிலிண்டர், 2 ஸ்ட்ரோக், லிக்யூடு கூல்டு என்ஜின் பயன்படுத்துகிறது.

சமீபத்தில் KLX230 RS மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

kawasaki kx112 e1689301940294

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.