Kia India – 10 லட்சம் உற்பத்தி இலக்கை எட்டிய கியா மோட்டார்ஸ்

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் கியா மோட்டார்ஸ் நிறுவனம், 2023 செல்டோஸ் காரின் உற்பத்தியை தனது 10,00,000 வது காராக உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. ஒட்டுமொத்த உற்பத்தியில் செல்டோஸ் மட்டுமே 5 லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையை பெற்றுள்ளது.

தற்பொழுது இந்திய சந்தையில் கியா நிறுவனம், செல்டோஸ், சோனெட், கேரன்ஸ், மற்றும் எலக்ட்ரிக் EV6 ஆகியவற்றை விற்பனை செய்து வருகின்றது. சமீபத்தில் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகம் செய்தது.

Kia Motors

2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கியா செல்டோஸ் அறிமுகம் மூலம் இந்தியாவில் நுழைந்த ஹூண்டாய் குழுமத்தை தலைமையிடமாக கொண்ட கியா மோட்டார்ஸ், சிறப்பான வரவேற்பினை பெற்றது. தொடர்ந்து சோனெட் மற்றும் கார்னிவல் கார்களை 2020-ல் வெளியிட்டது.

அதனை தொடர்ந்து 2022-ல் கேரன்ஸ் மற்றும் எலக்ட்ரிக் கார் மாடலாக EV6 அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் நுழைந்த முதல் 46 மாதங்களில் 5 இலட்சம் இலக்கை கடந்த கியா தற்பொழுது 1 மில்லியன் இலக்கை கடந்துள்ளது.

புதுப்பிக்கபட்ட செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவு இன்று முதல் துவங்குகின்றது. மிகவும் அமோகமான வரவேற்பினை பெற்ற செல்டோஸ் காரில் மூன்று விதமான என்ஜின் ஆப்ஷனை பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.