Kia Seltos Bookings Open- செல்டோஸ் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கிய கியா மோட்டார்ஸ்

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான செல்டோஸ் எஸ்யூவி மாடலுக்கு முன்பதிவு துவங்கப்பட்டு ரூ.25,000 கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

சமீபத்தில் கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், 10,00,000 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்து சாதனை படைத்துள்ளது. குறிப்பாக 5 லட்சத்துக்கும் கூடுதலான செல்டோஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Kia Seltos Bookings Open

கியா மோட்டார் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்டை காரில் டெக் லைன், ஜிடி லைன் மற்றும் எக்ஸ் லைன் ஆகிய மூன்று வகைகளில் எஸ்யூவி கிடைக்கும்.  1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்களால் இயக்கப்படுகிறது. கூடுதலாக, புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் விருப்பத்தையும் வழங்குகிறது.

டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மற்றும் CVT ஆகியவை அடங்கும், டாப் டர்போ-பெட்ரோல் யூனிட் iMT அல்லது 7-ஸ்பீடு DCT உடன் வரவுள்ளது.

ஏற்கனவே, செல்டோஸ் கார் வைத்துள்ள உரிமையாளர்கள் மீண்டும் செல்டோஸ் வாங்க விரும்பினால் புதிதாக K-Code என்ற திட்டத்தை செயல்படுத்துகின்றது. இதன் மூலம், செல்டோஸ் மிக விரைவாக டெலிவரி பெறலாம்.

வரும் ஜூலை மாத இறுதியில் கியா செல்டோஸ் எஸ்யூவி விற்பனைக்கு வரக்கூடும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.