சென்னை: நடிகர் பரத்தின் 50வது படமாக உருவாகியுள்ளது லவ். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் வாணி போஜன்.
மலையாளத்தில் வெளியான லவ் படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது லவ் படம். த்ரில்லர் ஜானரில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆர்பி ஃபிலிம்ஸ் சார்பில் ஆர்பி பாலா இயக்கியுள்ள இந்தப் படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
பரத்தின் 50வது படமான லவ் ட்ரெயிலர் வெளியீடு: நடிகர் பரத் கடந்த 2003ம் ஆண்டில் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் நடித்து தன்னுடைய அறிமுகத்தை சிறப்பாக வெளிப்படுத்தினார். முதல் படமே ஷங்கர் இயக்கத்தில் நடித்திருந்த பரத், தொடர்ந்து அடுத்தடுத்த சிறப்பான படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மிகப்பெரிய நடிகராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிகவும் குறைவான படங்களிலேயே நடித்து வருகிறார் பரத். இவரது 50வது படமாக தற்போது லவ் படம் உருவாகியுள்ளது.
இந்தப் படம் வரும் ஜூலை 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதனிடையே தற்போது படத்தின் ட்ரெயிலர் ரிலீசாகியுள்ளது. த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த ட்ரெயிலரில் அழகான பரத் மற்றும் வாணி போஜனின் காதல் சிறப்பாக காட்டப்பட்டுள்ளது. மேலும் அந்தக் காதல் எப்படி கொலையில் முடிகிறது என்பதாக படத்தின் கதை செல்கிறது. மிகவும் மிரட்டலான இந்த ட்ரெயிலர் படத்தை பார்க்கும் ஆர்வத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
வரும் 28ம் தேதி சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் மற்றும் தோனி தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண் இணைந்துள்ள LGM ஆகிய படங்கள் ரிலீசாகவுள்ள நிலையில், மலையாளத்தில் இருந்து ரீமேக் செய்யப்பட்டுள்ள லவ் படமும் இந்தப் போட்டியில் சிறப்பாக பங்கேற்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தில் பரத் மற்றும் வாணி போஜனின் கெமிஸ்ட்ரி சிறப்பாக காட்டப்பட்டுள்ளது. படத்தை ஆர்பி ஃபிலிம்ஸ் சார்பில் ஆர்பி பாலா தயாரித்தும் இயக்கியும் உள்ளார்.
இருவேறு உலகத்தில் பயணிக்கும் இருவருக்குள் ஏற்படும் காதல், அதை தொடர்ந்து அவர்களிடம் ஏற்படும் பிரச்சினைகளை இந்தப் படம் கதைக்களமாக கொண்டுள்ளது. இந்தப் படத்திற்கு ரோனி ராப்பேல் இசையமைத்துள்ளார். அவரது பின்னணி இசை, படத்தில் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் படம் ரிலீசாகவுள்ள நிலையில், தற்போது ட்ரெயிலர் ரிலீசாகியுள்ளது. இசை வெளியீடும் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் படத்தில் விவேக் பிரசன்னா, ராதாரவி, டேனியல் ஆனி போப், ஸ்வயம் சித்தா, ஆடம்ஸ் போன்றவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான மிரள் படத்தில் பரத் -வாணி போஜன் ஜோடி சிறப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் இவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக லவ் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். கடந்த 2003ம் ஆண்டில் பாய்ஸ் படத்தில் அறிமுகமான பரத், 20 ஆண்டு காலங்களை சினிமாவில் கழித்துள்ளது குறிப்பிடத்தக்கது.