வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாரிஸ்: பிரான்ஸ் தேசிய தினத்தை முன்னிட்டு நடக்கும் கொண்டாட்டத்தில்
சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
ஐரோப்பிய
நாடான பிரான்சின், தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர
மோடி பாரிஸ் சென்றார். விமான நிலையத்தில் அந்நாட்டு பிரதமர் எலிசபெத்
போர்னே நேரில் வந்து வரவேற்றார்.
தொடர்ந்து பாரிசில், தேசிய
தினத்தை முன்னிட்டு அணிவகுப்பு நடந்து வருகிறது. அணிவகுப்பை பார்வையிட
குவிந்த மக்களை நோக்கி கையசைத்தபடி அதிபர் மேக்ரான் வாகனத்தில் சென்றார்.
தொடர்ந்து நடக்கும் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி
கலந்து கொண்டார். விழா மேடையில் இருந்த தலைவர்களுடன் மோடி
கலந்துரையாடினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement