வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
எலிசி: பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர்’ வழங்கி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கவுரவித்தார்.
ஐரோப்பிய நாடான பிரான்சின், ‘பேஸ்டிலா தினம்’ எனப்படும், அந்த நாட்டின் தேசிய தினத்தில், சிறப்பு விருந்தினராக பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். பாரிஸ் விமான நிலையத்தில், அந்த நாட்டின் பிரதமர் எலிசபெத் பார்னே, பிரதமர் மோடியை வரவேற்றார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பாரிசில் உள்ள ஹோட்டலுக்குச் சென்றார் மோடி. அங்கு, இந்திய வம்சாவளியினர் திரளாக குழுமியிருந்தனர். அவர்கள் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களுடன் பிரதமர் மோடி பேசினார். தொடர்ந்து இந்திய சமூகத்தினர் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாடினார்.
இதனை தொடர்ந்து எலிசி அரண்மனைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, அதிபர் மேக்ரான் மற்றும் அவரது மனைவி பிரிகர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின் அரண்மனையில் பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. பின்னர், பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர்’ வழங்கி பிரதமர் மோடி கவுரவிக்கப்பட்டார். இதன் மூலம் இந்த விருதினை பெரும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை பிரதமர் மோடிக்கு கிடைத்தது.
இன்று நடக்க உள்ள, பிரான்சின் தேசிய தினத்தில், அந்த நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானுடன், பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement