கறுப்பு பணத்தை பற்றி பேச உதயநிதி, முதல்வர் ஸ்டாலின் குடும்பத்திற்கு தகுதியில்லை…. அண்ணாமலை காட்டம்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “தமிழகத்தில் நேர்மையான நியாயமான அரசியலை கொண்டுவர சபதம் ஏற்றுள்ளோம். காவிரியில் ஏன் தண்ணீர் வரவில்லை என்பதற்காக தான் திமுகவின் முதல் தீர்மானம் இருந்திருக்க வேண்டும். கர்நாடகாவிற்கு எதிராக ஏன் திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றவில்லை? மேகதாது அணை கட்டியே தீருவோம் என காங்கிரஸ் கூறியுள்ளது. அதைப்பற்றி திமுக தீர்மானம் இயற்றவில்லை.

தமிழகத்தின் உரிமை தொடர்ந்து பறிபோயுள்ளது. மத்திய அரசை குறை சொல்வதை மட்டுமே திமுக செய்து வருகிறது. எல்லாவற்றுக்கும் மத்திய அரசை குறை சொல்வதை ஏற்க முடியாது. தமிழகத்தில் தான் பணவீக்கம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் விவசாய உற்பத்தி குறைந்துள்ளது. தக்காளி விலையை குறைக்க, மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் மானியம் கொடுக்கிறது. மிழக அரசு காய்கறி விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வடமாநிலங்களில் பெய்துவரும் பருவமழையால் காய்கறி உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் வரும் நாட்கள் சவாலனதாக இருக்கும் மாநில அரசு அதற்கு தயாராக இருக்க வேண்டும்.

திமுகவில் உள்ளவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது, தமிழ் அரைகுறையாகதான் தெரியும். இந்தி சுத்தமா தெரியாது. தமிழக முதல்வரே ஒரு மொழிதான் பேசுகிறார். அதனால்தான் பாட்னா கூட்டத்தில் எதுவும் பேசாமல் வந்தார். கர்நாடகா போனாலும் பேசுவதில்லை. அப்படி இருக்கும்போது பிரதமர் சொன்னது அவர்களுக்கு என்ன புரிந்தது? குறிப்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு பிரதமர் கூறியது ஒன்றுமே புரியவில்லை. அமைச்சர்

பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு கூட பதில் சொல்லாமல் சிரித்து விட்டு சினிமா ஷூட்டிங் போல செல்கிறார். பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு ஆக்கபூர்வமாக பதில் சொல்ல அவருக்கு அக்கறை இல்லை.

திமுக நிதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்திருப்பாதாக சொல்கிறார். அதுவா அவருக்கு புரிந்ததா? உதயநிதியும் ஸ்டாலினும் தங்களின் கேபினட்டில் ஆங்கிலம் மற்றும் இந்தி பேசுபவர்கள் ஓரிருவரை வைத்து கொள்ள வேண்டும். அப்போதுதான் பிரதமர் பேசுவது புரியும், பிரதமர் என்ன பேசினார் என்று புரியாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் சொன்னதை நிரூபித்தால் ஒரு கோடி தருகிறேன் என பாஜக தொண்டர்கள் போஸ்டர் ஒட்டுகிறார்கள். பிரதமர் மோடி கூறியதை மொழி பெயர்த்து போட்டுள்ளேன்.

ஸ்டாலின் பிரதமருக்கு துணையாக நின்று ED மற்றும் CBI அமைப்புகளை ஒழுக்கமாக வேலை செய்யவிட்டால் செந்தில் பாலாஜி மொரிஷியஸில் பதுக்கி வைத்துள்ள பணத்தை கொண்டு வந்துவிடலாம். பிரதமர் கூறிய வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்பு பணத்தில் செந்தில் பாலாஜியின் பணமும் உள்ளது. திமுக ராஜகண்ணப்பன் மீது வழக்கு உள்ளது. அவரும் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளார். பிலிப்பைன்ஸ் போர்ட்டில் ராஜ கண்ணப்பனின் கறுப்பு பணம் பதுக்கப்பட்டுள்ளது.

திமுகவினரின் கருப்பு பணம்தான் வெளிநாடுகளில் அதிகம் பதுக்கப்பட்டுள்ளது. அதையெல்லாம் மீட்க நடவடிக்கை எடுத்தால் நெஞ்சுவலி என மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிடுகிறார்கள். உதயநிதியும் வெளிநாட்டில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளார். கறுப்பு பணத்தை பற்றி பேச உதயநிதிக்கும் திமுக குடும்பத்தினருக்கும் தகுதியே இல்லை. அவர்களே கறுப்பு பண பதுக்கலில் சம்பந்தப்பட்டுள்ளார்கள்”. இவ்வாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.