சென்னை: நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான காவாலா பாடல் சமீபத்தில் வெளியாகி சக்கைப் போடு போட்டு வருகிறது.
இசையமைப்பாளர் அனிருத் இசையில் தமன்னாவின் தாறுமாறு கவர்ச்சி ஆட்டம் தான் அந்த பாடலை இந்த அளவுக்கு ஹிட் அடிக்க வைத்துள்ளது.
ஏகப்பட்ட மீம்ஸ்கள் ஒரு பக்கம் பறந்தாலும், காவாலா பாட்டுக்கு பல பிரபலங்கள் மற்றும் ஏஐ அட்டகாசம் என அந்த பாடல் வேறலெவலில் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், பிக் பாஸ் சம்யுக்தா மற்றும் பாவனா பாலகிருஷ்ணன் இருவரும் இணைந்து ஆடிய காவாலா டான்ஸ் மற்றும் அதனை தொடர்ந்து ஆங்கில பாடல் ஒன்றுக்கு போட்ட நடன வீடியோக்கள் ரசிகர்களின் லைக்குகளை அள்ளி உள்ளன.
காவாலா பாட்டுக்கு குவியும் ரீல்ஸ்: விஜய்யின் லியோ படத்தின் “நா ரெடி” பாடலுக்கு ரீல்கள் குவிந்த நிலையில், அதனை ஓவர்டேக் செய்யும் விதமாக அதிகளவிலான இன்ஸ்டா ரீல்கள் ரஜினிகாந்தின் “காவாலா” பாட்டுக்கு குவிந்து வருகிறது.
போதாக்குறைக்கு தமன்னா போட்ட டான்ஸை வைத்து சிம்ரன், காஜல் அகர்வால், கியாரா அத்வானி என ஏகப்பட்ட நடிகைகள் ஆடுவதை போல ஏஐ தொழில்நுட்பமே டிசைன் செய்து அந்த பாடலை உலகளவில் ரீச் ஆக்கி வருகிறது.
சம்யுக்தா – பாவனா டான்ஸ்: இரட்டை சகோதரிகள் போல பல பாடல்களுக்கு ஒரே மாதிரியாக நடனம் ஆடி ரீல்ஸ் போட்டு வரும் பிக் பாஸ் சம்யுக்தா மற்றும் தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் இருவரும் சமீபத்தில் ஜெயிலர் படத்தின் காவாலா பாட்டுக்கு செம க்யூட்டாக டான்ஸ் போட்ட வீடியோவை தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகின்றனர்.
பச்சை கலர் டாப்ஸ் மற்றும் சிவப்பு கலர் பாவாடை அணிந்து கொண்டு இருவரும் போட்ட ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டு இருவரையும் வர்ணித்து வருகின்றனர். சமீபத்தில், இரவின் நிழல் நடிகை சாய் பிரியங்கா ரூத், பிக் பாஸ் தனலட்சுமி எல்லாம் அந்த பாடலை கெடுத்து விட்டதாக ட்ரோல்கள் பறந்த நிலையில், இந்த இருவரும் செம அழகாக ஸ்டெப் போட்டு ஆடியுள்ளனர் என கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
குட்டி டவுசரில் குத்தாட்டம்: பழையபடி மீண்டும் ஒன்றாக நடனமாடி ரீல்ஸ் போட ஆரம்பித்த இரு தோழிகளும் தற்போது மீண்டும் ஒரு வீடியோவை போட்டு ரசிகர்களை வசீகரித்துள்ளனர். குட்டி ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு பிக் பாஸ் சம்யுக்தா செம கிளாமராக ஆட்டம் போட்டுள்ளார். கூடவே தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணனும் அவருக்கு இணையாக ஆட்டம் போட்டு அந்த வீடியோவை டிரெண்டாக்கி வருகிறார்.