நான் ஒரு ஆபாச நடிகை தான்.. ஆனால், நான் உங்களைப்போல் இல்லை..ரோஜாவுக்கு சன்னி லியோன் சரியான பதிலடி!

சென்னை: நடிகையும் எம்எல்ஏவுமான ரோஜா சன்னி லியோனை விமர்சித்து மேடையில் பேசியது சர்ச்சையான நிலையில், சன்னி லியோன் அதற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

ஆந்திராவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் கடந்த இரண்டு வாரமாக வாராகி யாத்ரா என்ற பெயரில் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

இந்த யாத்திரையில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சனம் செய்து பேசி இருந்தார்.

ரோஜா பதிலடி: இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா, பவன் கல்யாண் ஒரு நடிகர் என்பதால் அவரைப் பார்க்கத்தான் கூட்டம் வருகிறது. இதெல்லாம் ஓட்டாக மாறும் என்று அவர் கனவு காண்கிறார் என்றார். மேலும், பவன் கல்யாண், முதலமைச்சருக்கு பாடம் எடுப்பதை பார்க்கும் போது, சன்னி லியோன் ஒழுக்கத்தை பற்றி வேதம் ஓதுவது போல் உள்ளது என்று பேசி இருந்தார்.

கடும் கண்டனம்: ரோஜாவின் பேச்சு இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆபாச நடிகையோடு பவன் கல்யாணை ஒப்பிட்டு பேசுவதா என்றும், மேலும், சிலர், சன்னி லியோன் கடந்த காலத்தில் ஆபாச நடிகையாக இருந்து தற்போது பாலிவுட் கதாநாயகியாக தனது திறமையான நடிப்பால் தனது வாழ்க்கையைத் தொடர்ந்து வருகிறார். அது மட்டுமில்லாமல் குழந்தைகளை தத்தெடுத்து வளர்ந்து வருகிறார். பல தொண்டு பணிகளையும் செய்து வரும் அவரை விமர்சித்தது தவறு என்று பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Bollywood actress Sunny Leone responds to MLA Roja

நான் ஒரு ஆபாச நடிகை தான்: இந்த நிலையில், நடிகை சன்னி லியோன், தனது ட்விட்டர் பக்கத்தில் ரோஜா பேசிய வீடியோவை வெளியிட்டு, நான் ஒரு ஆபாச நடிகை தான். ஆனால் எனது கடந்த காலத்தை நினைத்து நான் ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை. உங்களைபோல் இல்லாமல், நான் எதைச் செய்ய விரும்புகிறேனோ அதை வெளிப்படையாகவே செய்வேன். ஆனால் நீங்கள் அப்படி செய்யவில்லை. உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், நான் ஆபாச பட உலகை விட்டு வெளியேறினேன். ஆனால் அதை நீங்கள் செய்யவில்லை என சரியான பதிலடி கொடுத்துள்ளார். சன்னி லியோனின் இந்த பதிவினை எதிர்க்கட்சிகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.