வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாரிஸ்: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் அதிகாரப்பூர்வ இல்லமான எலிசி மாளிகைக்கு பார்சலில், துண்டிக்கப்பட்ட மனித கைவிரல் அனுப்பி வைக்கப்பட்ட விவகாரம் தெரியவந்துள்ளது.
இதனை உறுதி செய்துள்ள போலீசார், இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு விடுக்கப்படும் மிரட்டல் எனக்கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த கைவிரல், பார்சலை அனுப்பியவருக்கு சொந்தமானதாக இருக்கலாம் எனக்கூறியுள்ள போலீசார், பார்சலில் விரல் இருந்தது அதிபரின் உதவியாளர் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் தான், பாரிசில் சிறுவன் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பெரும் வன்முறை வெடித்தது. இதில் அரசு சொத்துகள், உடைமைகள் சேதப்படுத்தப்பட்டன. இதனை கட்டுப்படுத்த அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். இச்சூழலில், அதிபர் மாளிகைக்கு துண்டிக்கப்பட்ட மனித கைவிரல் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement