பெங்களூரு : பெங்களூரில் நடந்த சாலை விபத்தில், தந்தை, மகன் உயிரிழந்தனர்.
பெங்களூரின், ஹெப்பகோடியின், சம்பிகே நகரில் வசித்தவர் மஞ்சப்பா, 43. இவரது மகன் மனோஜ், 17.
இவர்கள் நேற்று காலை, ஓசூர் சாலையின், கெஸ்ட் லைன் கேட் அருகில் பைக்கில் செல்லும் போது, லாரி மோதியது. இதில் காயமடைந்த தந்தையும், மகனும் அதே இடத்தில் உயிரிழந்தனர்.
இருவர் பலி: சிக்கமகளூரு, கடூரின், கம்சாகரா கிராமத்தின் அருகில், நேற்று மதியம் சென்ற பைக் மீது, கார் மோதியது. பைக்கில் பயணித்த லோஹித், 33, நாகராஜ், 35, அதே இடத்தில் உயிரிழந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement