Simbu: 'எஸ்டிஆர் 48' பட லுக்கா.? வெறித்தனமாக ரெடியாகும் சிம்பு: தீயாய் பரவும் புகைப்படம்.!

சிம்பு தனது ரீ என்ட்ரிக்கு பிறகு தரமான கதைகளை தேர்தெடுத்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக ‘எஸ்டிஆர் 48’ படம் உருவாகவுள்ளது. தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ள இந்தப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார். இதனையடுத்து ‘மாநாடு’ படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்தார். அதனை தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும் அறிவித்தது படக்குழு.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்தப்படத்தை தொடர்ந்து வெளியான ‘பத்து தல’ படமும் ஹிட்டடித்ததால் தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றியை கண்டுள்ளார் சிம்பு. இதனால் தனது அடுத்த படத்தை இன்னும் பிரம்மாண்டமாக கொடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறார். இதனையடுத்து தான் உலக நாயகனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க கமிட் ஆனார் சிம்பு.

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்டிஆர் 48’ படமாக உருவாகவுள்ளது இந்தப்படம். பிரம்மாண்டமாக தயாராகவுள்ள இந்தப்படத்தில் வரலாற்று சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாம் இடம்பெற போவதாக கூறப்படுகிறது. தேசிங்கு பெரியசாமி ஏற்கனவே துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்ற ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தினை இயக்கியவர்.

Maaveeran: ‘மாவீரன்’ படத்தின் கதை உண்மை சம்பவமா.?: மடோன் அஸ்வின் பகிர்ந்த சீக்ரெட் தகவல்.!

இவர் இயக்கத்தில் சிம்பு நடிப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. மேலும், ‘எஸ்டிஆர் 48’ படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியானது. ஹீரோ, வில்லன் என இரட்டை வேடத்தில் அவர் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் அவர் சற்று உடல் எடை அதிகரித்து காணப்படுகிறார்.

இது ‘எஸ்டிஆர் 48’ படத்தின் ஒரு ரோலுக்கான லுக் என கூறப்படுகிறது. சிம்பு தற்போது மலேசியாவில் நடைபெறும் யுவனின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘எஸ்டிஆர் 48’ படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Leo: ‘லியோ’ குறித்து வெளியான சூப்பர் அப்டேட்: ஜெட் வேகத்தில் லோகேஷ் கனகராஜ்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.