சென்னை: நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ளது மார்க் ஆண்டனி படம். படம் வரும் செப்டம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய விஷால் 34 படத்தில் இணைந்துள்ளார் விஷால். படத்தை இயக்குநர் ஹரி இயக்கிவருகிறார்.
இந்தப் படத்தின்மூலம் மூன்றாவது முறையாக விஷால் -ஹரி கூட்டணி இணைந்துள்ளது. படத்தின் சூட்டிங் தற்போது துவங்கியுள்ளது.
நடிகர் விஷால் -ஹரி கூட்டணியில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்: நடிகர் விஷால் அடுததடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து படங்களில் நடித்துவரும் விஷால், அடுத்ததாக மார்க் ஆண்டனி, துப்பறிவாளன் 2 படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் மார்க் ஆண்டனி படம் வரும் செப்டம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் நடிகை ரீத்து வர்மா விஷாலுக்கு ஜோடியாகியுள்ளார். டைம் டிராவலை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகிவருகிறது. படத்தில் எஸ்ஜே சூர்யாவும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா இருவரும் இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்திலும் விஷால் நடித்துள்ளார். படத்தை அவரே இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் முதல் பாகத்தை இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் ஹரி கூட்டணியில் இணைந்துள்ளார் விஷால். இந்தப் படத்தின் பூஜை கடந்த ஏப்ரல் மாதத்தில் போடப்பட்ட நிலையில், தற்போது சூட்டிங் துவங்கவுள்ளதாக படக்குழுவினர் அப்டேட் தெரிவித்துள்ளனர். படத்தின் பூஜையின்போதே பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதிரடியாக வெளியாகின. அதில் ஸ்டெதஸ்கோப்புடன், அரிவாள், கத்தி போன்றவை இருப்பதாக காணப்பட்டது.
முன்னதாக இந்தக் கூட்டணியில் தாமிரபரணி, பூஜை போன்ற படங்கள் வெளியான நிலையில், இந்தப் படத்தை ஹாட்ரிக் வெற்றியாக்க ஹரி சிறப்பான திட்டங்களை போட்டுள்ளார். அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகவுள்ள படத்திற்கு தற்காலிகமாக விஷால் 34 என்று பெயரிடப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து படத்தை தயாரிக்கவுள்ளனர். படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் குறித்து விரைவில் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்நிலையில் இந்தப் படத்தின் புதிய இணைப்பாக படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சிங்கம் படங்களுக்கு இசையமைப்பாளராக சூர்யா -ஹரி காம்பினேஷனில் இணைந்திருந்தார் தேவிஸ்ரீ பிரசாத். இதனிடையே, சூர்யாவுடன் கங்குவா படத்தில் இணைந்துள்ள அவர், ஹரியுடன் விஷால் 34 படத்திலும் இசையமைப்பாளராக இணைந்துள்ளார். இந்த காம்பினேஷனும் சிறப்பாக வொர்க் அவுட் ஆகும் என்று எதிர்பார்க்கலாம்