அலாஸ்கா தீபகற்ப பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பின்படி, இன்று காலை சாண்ட் பாயிண்ட் நகருக்கு தென்மேற்கே 89 கிலோமீட்டர் தொலைவில் 32.6 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.
அண்ணாமலை அடிக்கடி வெளிநாடு போறது இதுக்குதான்… பகீர் கிளப்பும் கேஎஸ் அழகிரி!
ரிக்டர் ஸ்கேலில் 7.4 ஆக உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 9.3 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளுது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை வெளியேறினர். முதலில் தெற்கு அலாஸ்கா மற்றும் அலாஸ்கா தீபகற்பமும் முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் டிவிட்டர் வாயிலாக ரத்து செய்யப்பட்டது.
2024ல் ரஷ்ய அதிபர் புடினுக்கு ஆபத்து… பாபா வங்காவின் பகீர் கணிப்பு!
1964 ஆம் ஆண்டு வட அமெரிக்க நாடான அலாஸ்காவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அலாஸ்கா வளைகுடா பகுதி மற்றும் அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதி, ஹவாய் தீவுகளில் சுனாமி பேரலைகள் தாக்கின. இதில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.