![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/1689515113_NTLRG_20230716110052160418.jpg)
'சலார்' சொந்தமாக வெளியிடத் திட்டம் ?
'கேஜிஎப்' படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்கும் 'சலார்' படம் செப்டம்பர் 28ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
'கேஜிஎப் 2' படத்தைத் தயாரித்து வெளியிட்ட ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்திற்கு குறைவான லாபமே கிடைத்தது. ஆயிரம் கோடி வசூலைக் கடந்த படமாக அது அமைந்தது. ஆனால், அந்தப் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் பல லட்சம், ஏன் சிலர் கோடிக்கும் அதிகமான லாபத்தைக் கூடப் பார்த்தார்கள்.
அதனால், 'சலார்' படத்தின் மூலம் தயாரிப்பு நிறுவனமே அதிக லாபத்தைப் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் படத்தை சில குறிப்பிட்ட மாநிலங்களில் சொந்தமாக வெளியிடத் தீர்மானித்துள்ளார்களாம். குறிப்பிட்ட சதவீதம் கமிஷன் கொடுத்து படத்தை வெளியிடலாம் என்றும், அதற்கு யார் முன் வருகிறார்களோ அவர்களுடன் வியாபாரப் பேச்சு வார்த்தையை ஆரம்பிக்கலாம் என்றும் டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
இந்த அடிப்படையில் வெளியிடுவதன் மூலம் வெளியிடுபவர்களுக்குக் குறைந்த அளவில் லாபமும், தயாரிப்பு நிறுவனத்திற்கு அதிக லாபமும் நேரிடையாக வர வாய்ப்புள்ளது.