Big boss Vikraman – பிக்பாஸ் விக்ரமனுக்கு அடுத்த சிக்கல்.. வெளியான மற்றொரு ஆதாரம்?

சென்னை: Big boss Vikraman (பிக்பாஸ் விக்ரமன்) பிக்பாஸ் விக்ரமன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக கூறி கிருபா என்பவர் ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதுவரை 6 சீசன்கள் நடந்து முடிந்திருக்கின்றன. எந்த சீசனிலும் இல்லாத அளவு ஆறாவது சீசனில் சண்டை, சச்சரவுகளும்; எந்த சீசனுக்கும் இல்லாத பேச்சும் 6ஆவது சீசனுக்கு எழுந்தது. அதற்கு காரணம் அதில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள். குறிப்பாக, விக்ரமன், அசீம், ஷிவின்.

சென்சேஷனல் அசீம்: பிக்பாஸ் 6ஆவது சீசனில் அசீமின் ஒவ்வொரு செயல்பாடும், பேச்சும் பலருக்கும் முகசுளிப்பையே ஏற்படுத்தியது. திருநங்கையான ஷிவினை உடல்மொழியால் கிண்டல் செய்தது, பார்ப்பவர்களை எல்லாம் தரக்குறைவாக பேசியது என அசீம் எல்லை மீறியே சென்றார். இதனையடுத்து வாரா வாரம் ஹவுஸ் மேட்ஸுடன் பேசும் கமல் அசீமுக்கு தொடர்ந்து அட்வைஸ் செய்தார். முக்கியமாக, உங்களது மகன் இதை பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்றெல்லாம் அட்வைஸ் செய்து பார்த்தார். இருப்பினும் பிக்பாஸ் முடியும்வரை அசீம் தன்னுடைய செயல்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை.

டைட்டில் வின்னர் அசீம்: ஒருவழியாக விக்ரமன், அசீம், ஷிவின் ஆகிய மூன்று பேரும் இறுதிக்குள் நுழைந்தனர். விக்ரமனோ, ஷிவினோதான் பிக்பாஸ் 6 டைட்டில் வின்னராவார்கள் என பலரும் எதிர்பார்த்திருந்த சூழலில் அசீம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியது. விக்ரமன் இரண்டாவது இடத்தையும், ஷிவின் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

 Kiruba has shared a screenshot saying that Bigg Boss Vikraman cheated on her

அறம் வெல்லும்: குறிப்பாக விக்ரமனுக்கு ஆறாவது சீசனில் ரசிகர்கள் பெருமளவு இருந்தனர். எல்லோரிடமும் பொறுமையாக பேசியது; சுயமரியாதையை கடைசிவரை தக்க வைத்தது என அவரது ஒவ்வொரு செயலுக்கு அப்ளாஸ் கிடைத்தது. இதன் காரணமாக விக்ரமன் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தோல்வியடைந்தார். இருப்பினும் விக்ரமன் தோற்றாலும் அறம் வென்றது என சிலாகித்தனர் விக்ரமனின் ரசிகர்கள்.

குற்றச்சாட்டு: பிக்பாஸ் முடிந்த பிறகு வெளியே விக்ரமன் மீது கிருபா என்ற பெண்மணி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதாவது விக்ரமன் தன்னை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார். பணத்தையும் வாங்கிக்கொண்டார் என கூறியிருந்தார். இது பலரையும் அதிச்சிக்குள்ளாக்கியது.

புதிய ஆதாரம்: ஆனால் விக்ரமன் அப்படி செய்திருக்க வாய்ப்பில்லை என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறிவந்தனர். இந்நிலையில் அந்தப் பெண்மணி புதிய ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், யுகே அக்கவுண்ட்டில் இருந்த 45 ஆயிரம் ரூபாயையும், ஹெச்டிஎஃப்சி அக்கவுண்ட்டில் இருந்த 3000 ரூபாயையும் அனுப்பிவிட்டேன். இவ்வளவுதான் என்னிடம் இருந்தது என கூறியிருக்கிறார்.

மேலும், அந்தப் பெண்மணிக்கு விக்ரமன் லவ் யூ சொல்லியதுபோலவும் இருக்கிறது. தற்போது இந்த ஸ்க்ரீன் ஷாட் மீண்டும் இந்த விவகாரத்தை சூடுபிடிக்க வைத்திருக்கிறது. இதனை பார்த்த சிலர் விக்ரமன் இதுதான் உங்கள் அறமா என கேள்வி எழுப்பிவருகின்றனர். அதேசமயம் இது அனைத்தும் பொய்யானவை என விக்ரமன் ரசிகர்களும் பதிலடி கொடுத்துவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.