வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சந்திராயன்-3க்கு இந்தியா ரூ.615 கோடி செலவிட்டுள்ளது. பாக்., சுதந்திர விழாவுக்காக 400 மில்லியன் செலவு செய்ய உள்ளதாக பாக்,நாட்டின் சமூக வலை தள வாசகர் ஒருவர் பதிவிட்டு உள்ளார்.
இந்தியா சார்பில் நிலவை ஆராய்வதற்காக சந்திராயன் -3 செயற்கை கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. இதற்கான செலவு ரூ.615 கோடியாகும். இது நாடு முழுவதும் அனைத்து தரப்பினரையும் பெருமைகொள்ளச்செய்தது.அதுமட்டுமல்லாது ஆன்லைன் வாயிலாகவும் ஏராளமானோர் பார்வையிட்டு சந்திராயன்-3 குறித்த படங்கள் வீடியோக்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிலையில் பாக்.,ஐ சேர்ந்த சமூக வலைதள வாசகர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:இது இரு நாடுகளின் மாறுபட்ட முன்னுரிமைகளை எடுத்துகாட்டுகிறது. என பதிவிட்டு உள்ளார்
மேலும் அவர் வரும் ஆகஸ்ட் மாதம் 14 ம் தேதி பாக்., தனது சுதந்திர தினத்தை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக 500 அடி உயர கொடி கம்பத்தில் தேசிய கொடியை ஏற்ற உள்ளது. இதற்காகவும் சுதந்திர தின விழாவிற்காகவும் 400 மில்லியன் அளவிற்கு செலவை திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனையை கொண்டாடும் அதே வேளையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அதன் முன்னேற்றத்தை வெளிப்படுத்துகிறது, அண்டை நாடான பாகிஸ்தான் ஒரு வித்தியாசமான தேசிய அக்கறையை பிரதிபலிக்கிறது இது வரி செலுத்துவோர் பணத்தையும் மதிப்பு மிக்க வளங்களையும் தவறாக பயன்படுத்துவதாக பலரும் பதிவிட்டு உள்ளனர்.
500 அடி உயர கொடி கம்பத்தில் தேசிய கொடியை பறக்க விட முடிவு செய்துள்ள பாக்., இதற்காக 800 கிலோ பாலியஸ்டர் துணியை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. மேலும் 15 கி.மீ தொலைவில் இருந்தும் பார்வையிடும் வகையில் எல்இடி விளக்குகளும் பொருத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement