சிவகார்த்திகேயன் நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளியான மாவீரன் திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகின்றது. மண்டேலா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் அஸ்வின். முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற அஸ்வினுடன் சிவகார்த்திகேயன் இணைகிறார் என்றதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்தது.
இதையடுத்து இப்படத்தின் போஸ்டர் மற்றும் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியானதை அடுத்து கண்டிப்பாக மாவீரன் வித்யாசமான படமாக இருக்கும் என ரசிகர்களால் கணிக்கப்பட்டது. அதுபோலவே தற்போது வெளியான மாவீரன் திரைப்படம் சிவகார்த்திகேயனை புது விதமாக காட்டி அவர்களுக்கு புதுவிதமான ஒரு அனுபவத்தை கொடுத்தது.
மாவீரன் வெற்றி
என்னதான் மாவீரன் கமர்ஷியல் படமாக இருந்தாலும் அதிலும் புதுமையை காட்டி ரசிகர்களை ஈர்த்தார் இயக்குனர் அஸ்வின். குறிப்பாக இப்படத்தில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரமும் அவரது நடிப்பும் தான் ஹைலைட்டான விஷயமாக அமைந்தது.
Jailer: ரசிகர்களின் கவனத்திற்கு…ஜெயிலர் படம் பார்க்க இப்படி தான் வரணுமாம்..!
வழக்கமாக தன் படங்களில் சிரித்து பேசி கலகலவென நடித்து வந்த சிவகார்த்திகேயன் இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதுவே ரசிகர்களுக்கு புதுசாக இருந்தது. இந்நிலையில் இவ்வாறு பல சிறப்பான விஷயங்கள் மாவீரன் படத்தில் அமைந்துள்ளதால் படத்திற்கு அமோகமான வரவேற்பு கிடைத்து வருகின்றது.
சிவகார்த்திகேயன் சாதனை
முதல் நாள் முதல் காட்சிக்கு முன்பதிவு சற்று குறைவாகவே இருந்தாலும் அடுத்தடுத்த காட்சிகளுக்கு முன்பதிவு அமோகமாக இருந்தது. தற்போது முதல் நாள் வசூலை விட அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் முதல் நாளில் மாவீரன் திரைப்படம் 8 கோடி வரை வசூலித்திருந்த நிலையில் அடுத்தடுத்த நாட்களில் தலா பத்து கோடி வரை வசூலித்துள்ளது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
மேலும் படத்திற்கு பாசிட்டிவான டாக் இருப்பதாலும், அடுத்த வாரமும் எந்த பெரிய படமும் வெளியாகாததாலும் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் திரைவாழ்க்கையிலேயே மாவீரன் திரைப்படம் அதிக வசூலை ஈட்டிய படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே மாவீரன் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு அவர் எதிர்பார்த்த வெற்றியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது