சென்னை: Sivakarthikeyan (சிவகார்த்திகேயன்) சிவகார்த்திகேயன் தமிழ் மீடியாக்களை அவமதித்துவிட்டாரா என ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் சில தடுமாற்றங்களை சந்தித்தாலும் அனைத்தையும் கற்றுக்கொண்டு தற்போது டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். விஜய் சினிமாவில் வளர்ந்த காலத்தில் எப்படி சிறுவர்களும், சிறுமிகளும் ரசிகர்களாக இருந்தனரோ அதேபோல் சிவாவுக்கும் தற்போது இருக்கின்றனர்.
இரண்டு நூறு கோடி படங்கள்: கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்து சிறப்பாக பயணிக்கும் சிவகார்த்திகேயன் டாக்டர் மற்றும் டான் படங்களில் நடித்தார். அந்த இரண்டு படங்களும் நூறு கோடி ரூபாயை வசூலித்தது. அதனையடுத்து நடித்த பிரின்ஸ் படம் படுதோல்வியை சந்தித்தது. பிரின்ஸ் படத்துக்கு பிறகு மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
மாவீரனுக்கு வரவேற்பு: ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகியிருக்கும் மாவீரனில் அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். கடந்த 14ஆம் தேதி படம் ரிலீஸானது. பயந்த சுபாவம் உள்ள சத்யா என்ற கேரக்டரில் சிவகார்த்திகேயன் சிறப்பாகவே நடித்திருக்கிறார். அதேபோல் ஆக்ஷன் காட்சிகளிலும் பின்னியெடுத்திருக்கிறார். படத்தின் திரைக்கதையும் ரசிக்கும்படி இருந்ததால் மாவீரனுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பையே கொடுத்திருக்கின்றனர்.
மாவீரனில் சர்ப்ரைஸ்: படத்தில் உச்சக்கட்ட சர்ப்ரைஸாக சிவகார்த்திகேயனின் மைண்ட் வாய்ஸுக்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்ததுதான். அவர் சொல்ல சொல்லத்தான் சிவா கேட்பது போன்று இயக்குநர் காட்சிகளை அமைத்திருந்தார். தற்கால தலைமுறை நடிகர்களில் சிவகார்த்திகேயனுக்கும், விஜய் சேதுபதிக்கும்தான் போட்டி என பலர் பேசிக்கொண்டிருந்த சூழலில் விஜய் சேதுபதி வாய்ஸ் கொடுத்திருப்பது பாராட்டுக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
புதிய சர்ச்சை: மாவீரன் படத்தில் விஜய் சேதுபதி வாய்ஸ் கொடுத்ததை படக்குழு ரிலீஸுக்கு சில நாட்கள் முன்னர்வரை சர்ப்ரைஸாகவே வைத்திருந்தது. ஆனால் தற்போது அந்த விஷயம் குறித்த புதிய சர்ச்சை எழுந்திருக்கிறது. அதாவது மாவீரன் ப்ரோமோஷனுக்காக உள்நாடு, வெளிநாடு என பறந்துகொண்டிருந்தார் சிவகார்த்திகேயன்.
ஆனால் விஜய் சேதுபதியின் வாய்ஸ் ஓவர் குறித்த விஷயத்தை படக்குழு வெளியிடும் முன்னர் உள்நாட்டில் சிவகார்த்திகேயன் அதுகுறித்து வாய் திறக்கவில்லை. அதேசமயம் மலேசியா ப்ரோமோஷனின்போது அதனை அவர் ஓபன் செய்துவிட்டதாக தகவல் வெளியானது.
தமிழ் மீடியாக்களை அவமதித்தாரா சிவகார்த்திகேயன்: இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் மீடியாவிலிருந்து வந்த சிவகார்த்திகேயன் தமிழ் மீடியாக்களிடம்தானே முதலில் அதை ஓபன் செய்திருக்க வேண்டும். ஆனால் மலேசியா ப்ரோமோஷனில் ஏன் படக்குழு சொல்வதற்கு முன்னதாகவே ஓபன் செய்தார் என கேள்வி எழுப்பினர்.
இந்தச் சூழலில் திரைப்பட விமர்சகர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த விஷயம் தொடர்பான ஒரு வீடியோவை பகிர்ந்து தமிழ் மீடியாக்களை சிவகார்த்திகேயன் அவமதித்தாரா என கேள்வி எழுப்பியிருக்கிறார். அவர் இவ்வாறு ட்வீட் போட்ட பிறகு பலரும் இதே கேள்வியை கேட்டுவருகின்றனர்.