விழுப்புரம்:
அமைச்சர் பொன்முடியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வரும் நிலையில் பரபரப்பான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அவரது அலுவலக பீரோவுக்கு சாவி இல்லை எனக் கூறப்பட்டதால் அதிரடி நடவடிக்கையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இறங்கி இருக்கின்றனர்.
அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சூர்யா கல்விக் குழுமத்தில் அமலாக்க துறையினர் 6 பேர் கொண்ட சோதனையில் ஈடுபட்டு
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை திடீர் சோதனை நடத்தினர். ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ரெய்டு நடத்தப்பட்டது மட்டுமல்லாமல் அவர் மீது கைது நடவடிக்கையும் பாய்நதிருக்கும் நிலையில், பொன்முடியை தற்போது அமலாக்கத்துறையினர் குறி வைத்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நில மோசடி வழக்கில் நீதிமன்றத்தால் கடந்த வாரம்தான் பொன்முடி விடுவிக்கப்பட்டார். இதுபோன்ற சூழலில் அமலாக்கத்துறையின் இந்த ரெய்டு நடவடிக்கை திமுகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
பொன்முடிக்கு சொந்தமாக சென்னை மற்றும் விழுப்புரத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்கள், அவரது மகனான விக்கிரவாண்டி எம்.பி. கவுதம சிகாமணிக்கு சொந்தமான சூர்யா கல்லூரி, கயல்பொன்னி ஏஜென்சி உள்ளிட்ட இடங்களில் காலை 8 மணி முதலாக அமலாக்கத்துறையினர் தீவிர ரெய்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரத்தில் உள்ள பொன்முடியின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்திய போது, அங்குள்ள பீரோ பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, பீரோ சாவியை தருமாறு அங்குள்ள பணியாளர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டுள்ளனர். ஆனால், அவர்கள் பீரோ சாவி எங்கிருக்கிறது எனத் தெரியவில்லை எனக் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறையினர் அதே பகுதியில் உள்ள சாவி செய்யும் நபரை சில நிமிடங்களில் அழைத்து வந்து, அந்த பீரோவுக்கு சாவி செய்து தருமாறு கூறினர்.
இதன்பேரில், அந்த பீரோவுக்கு புதிய சாவி செய்யும் பணியில் அந்த நபர் ஈடுபட்டார். ஆனால், அது இரும்பு லாக்கர் என்பதால் அதற்கு சாவியை செய்வது கடினம் எனக் கூறிவிட்டு அவர் அங்கிருந்து வெளியேறியதாக தெரிகிறது. இதையடுத்து, அந்த லாக்கரை திறப்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, இந்த ரெய்டில் பல முக்கிய ஆவணங்களும், கோப்புகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.