வேலூர் பொற்கோயிலில் பாலாபிஷேகம் செய்த சமந்தா
சிவா நிர்வானா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் குஷி. தெலுங்கில் தயாராகியுள்ள இப்படம், தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ஐந்து மொழிகளில் செப்டம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து வேலூருக்கு அருகே உள்ள ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு சென்ற சமந்தா, அங்கு சுவாமி தரிசனம் செய்துள்ளார். அங்குள்ள மத குருவிடம் ஆசி பெற்றவர், அந்த பொற்கோவில் உள்ள சுவர்ண லட்சுமி அம்மன் சிலைக்கு பாலாபிஷேகம் செய்துள்ளார். அந்த கோவில் நிர்வாகம் சார்பிலும் சமந்தாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.