சென்னை: சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் கடந்த வாரம் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான இந்தப் படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது.
அதுமட்டும் இல்லாமல் முதல் மூன்று நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியுள்ளது மாவீரன்.
இந்நிலையில், முதல் வாரம் முடிவிலேயே மாவீரன் படத்தின் தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.
மாவீரன் முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸ்: சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில் உருவான மாவீரன் திரைப்படம் கடந்த வாரம் 14ம் தேதி ரிலீஸானது. தமிழ், தெலுங்கில் ரிலீஸான இந்தப் படத்தை மடோன் அஸ்வின் இயக்கியிருந்தார். சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரித்த மாவீரன், 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனுடன் யோகி பாபு, மிஷ்கின், சரிதா, சுனில் ஆகியோரும் நடித்திருந்தனர்.
அதிக எதிர்பார்ப்புடன் வெளியான மாவீரன், ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்டாக அமைந்துள்ளது. சிவகார்த்திகேயனும் மடோன் அஸ்வினும் இணைந்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சம் புதுமையாக விருந்து படைத்திருந்தனர். மக்களுக்காக மாவீரன் ஆகும் ஒரு கோழையின் கதையை, காமிக்ஸ் பின்னணியில் கூறியிருந்தது ரசிக்க வைத்தது. அதேபோல், விஜய் சேதுபதியின் வாய்ஸ் ஓவரும் படத்தின் மிகப் பெரிய பலமாக அமைந்தது.
மாவீரன் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவான விமர்சனங்களால் முதல் நாளில் இருந்தே நல்ல ஓபனிங் கிடைத்தது. வெள்ளிக் கிழமை நைட் ஷோ, சனிக்கிழமை ஈவ்னிங் ஷோ, நைட் ஷோ ஆகியவை ஹவுஸ்ஃபுல் ஆனது. அதேபோல், ஞாயிற்றுக் கிழமையான நேற்றும் மாவீரனுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலுமே இந்தப் படம் திரையிட்ட தியேட்டர்கள் மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தன.
இதனால், நேற்று மாவீரன் திரையிடப்பட்ட திரையரங்குகளில் பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ்ஃபுல்லாகின. முதல் நாளில் 10 கோடியும், இரண்டாம் நாளில் மேலும் 10 கோடியும் வசூலித்திருந்தது மாவீரன். ஆனால், வார இறுதிநாளான நேற்று 12 முதல் 14 கோடி ரூபாய் வசூலித்து மாஸ் காட்டியுள்ளது. இதன்மூலம் முதல் மூன்று நாட்களில் மாவீரன் வசூல் 35 கோடி ரூபாயை எட்டிவிட்டடதாக சொல்லப்படுகிறது.
இது அபிஸியல் அப்டேட் இல்லையென்பதால், இதனை விடவும் அதிகம் வசூலித்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் மாஸ் காட்டியுள்ளது மாவீரன். அதேபோல், அமெரிக்கா, மலேஷியா போன்ற வெளிநாடுகளிலும் இந்த வாரம் டாப் 10 சினிமாவில் மாவீரன் இடம்பெற்றுள்ளதாம். இந்நிலையில், உலகம் முழுவதும் 35 முதல் 40 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மாவீரன் வசூல் இன்னும் இரு தினங்களுக்குள் 50 கோடியை கடந்துவிடும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், 100 கோடி கலெக்ஷன் கன்ஃபார்ம் எனவும் சொல்லப்படுகிறது. முதல் மூன்றே நாட்களில் தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்துள்ளது சிவகார்த்திகேயனின் மாவீரன். இதனால், அவரும் மாவீரன் படக்குழுவினரும் ரொம்பவே மகிழ்ச்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.