அஜித்தின் துணிவும், விஜய்யின் வாரிசும் ஒரே நேரத்தில் வெளியானது. அதன்பின்னர் லியோவும், விடாமுயற்சி படங்களும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் துவங்கியது. ஆனால் விஜய்யின் ‘லியோ’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில் அஜித்தின் ‘விடாமுயற்சி’ ஷுட்டிங் இன்னமும் துவங்கப்படாமலே உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.
அஜித் நடிப்பில் கடைசியாக கடந்த பொங்கல் வெளியீடாக ‘துணிவு’ ரிலீசானது. எச். வினோத் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் வங்கி கொள்ளையை மையாக வைத்து ஆக்ஷன் ஜானரில் வெளியானது. இந்தப்படத்தில் அஜித் மாஸான நெகட்டிவ் கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார். இந்தப்படத்தினை தொடர்ந்து அஜித்தின் ‘ஏகே 62’ படத்தினை விக்னேஷ் சிவன் இயக்குவதாக கூறப்பட்டது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இதனையடுத்து திடீரென விக்கி இந்தப்படத்திலிருந்து விலகினார். அவரின் கதை தயாரிப்பு தரப்பிற்கு பிடிக்காத காரணத்தால் அவர் ‘ஏகே 62’ விலிருந்து விலகியதாக கூறப்பட்டது. இதனையடுத்து அந்தப்படத்தை இயக்கும் வாய்ப்பை மகிழ் திருமேனி கைப்பற்றினார். இதனையடுத்து அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மே 1 ஆம் தேதி ‘ஏகே 62’ படத்தின் ‘விடாமுயற்சி’ என்ற டைட்டில் மட்டும் வெளியானது. அதனை தொடர்ந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.
அஜித்தும் வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் கிளம்பிவிட்டார். இதனால் ‘விடாமுயற்சி’ எப்போது துவங்கும் என்ற ரசிகர்களின் கேள்விக்கு தற்போது வரை விடை கிடைக்கவில்லை. இந்நிலையில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. இதில் அவர் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான லுக்கிற்கு மாறியுள்ளார்.
Kamal: உங்களை கேட்காம செய்ய மாட்டேன்: நலம் விசாரித்த கமலிடம் ரோபோ சங்கர் கோரிக்கை.!
இந்த கெட்டப்பில் அஜித் வேறலெவலில் இருப்பதாகவும், விடாமுயற்சிக்காக இவ்வளவு நாட்களாக காத்திருந்தது வீண் போகவில்லை எனவும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும், அஜித் தற்போது சுவிட்சர்லாந்தில் இருந்து சென்னை திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ‘விடாமுயற்சி’ பட ஷுட்டிங் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தடையற தாக்க, மீகாமன், தடம், கலகத்தலைவன் போன்ற சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களை இயக்கியவர் மகிழ் திருமேனி. அவரது இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.
Thalapathy 68: படப்பிடிப்பு துவங்கும் முன்பே சம்பவம் செய்த ‘தளபதி 68’: அடேங்கப்பா.. வேறலெவல்..!