எதிர்க்கட்சிகள் கூட்டணி ’இந்தியா’ என அறிவிப்பு… ஏன் இந்த பெயர்? 3வது கூட்டம் எங்கு நடக்கிறது?

இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைந்த கூட்டணி (I.N.D.I.A). இதுதான் எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி பெங்களூருவில் நடத்திய 2வது ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகளில் ஒன்று. 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த மாநில கட்சிகளும், தேசிய கட்சிகளும் பிரிந்து கிடந்தால் சரிப்பட்டு வராது.

இந்தியா கூட்டணி

ஒன்றிணைந்தால் தான் வழி பிறக்கும் என்பதை உணர்ந்து பாட்னாவை தொடர்ந்து பெங்களூருவை தேர்வு செய்து ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். இதில் தங்களின் கூட்டணிக்கு இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைந்த கூட்டணி (Indian National Democratic Inclusive Alliance) என்று பெயர் வைத்துள்ளனர்.

எதிர்க்கட்சிகள் ஒருமித்த முடிவு

அதாவது, அனைவரையும் ஜனநாயகப் பூர்வமாக அரவணைக்கக் கூடிய ஒரு கூட்டணி எனப் பொருள்படுகிறது. இதன் ஆங்கில எழுத்துகளின் சுருக்கம் ”இந்தியா” என வருகிறது. இந்த பெயருக்கு 26 கட்சிகளின் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். கூட்டணியை பொறுத்தவரை காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ்,
திமுக
,

பாஜகவிற்கு எதிராக கைகோர்ப்பு

ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட் கட்சிகள், மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இனி எதிர்க்கட்சிகளின் கூட்டணியை இந்தியா கூட்டணி என அழைக்க தொடங்குவர்.

மும்பையில் அடுத்த கூட்டம்

இந்தப் பெயர் தற்போது தேசிய அளவில் ட்ரெண்டாக தொடங்கியுள்ளது. அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வழிகாட்டுதல் குழு அமைப்பது பற்றி முடிவு செய்யப்படும். இந்த குழு எதிர்க்கட்சிகளின் கூட்டணி வியூகம் மற்றும் தேர்தல் செயல்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும் எனச் சொல்லப்படுகிறது.

பாஜக கோட்டையில்

முதல் இரு கூட்டங்கள் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடந்தது. இந்நிலையில் 3வது கூட்டம் பாஜக – சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறுகிறது. இதனால் எதிர்பார்ப்பு பெரிதும் அதிகரித்துள்ளது.

ராகுல் காந்தி பேட்டி

பெங்களூரு ஆலோசனை கூட்டத்திற்கு பின் பேசிய ராகுல் காந்தி, இது இந்தியாவின் சித்தாந்தத்தை பாதுகாக்கும் போராட்டம். இதுவரை வரலாற்றில், இந்தியாவின் கருத்தை யாராலும் எதிர்த்துப் போராட முடிந்ததில்லை என்பதை நாம் அறியலாம் என்று தெரிவித்தார்.

மம்தா பானர்ஜி

INDIA-ஐ எதிர்க்க பாஜகவிற்கு தைரியம் உள்ளதா? பாஜகவின் அத்துமீறல்களில் இருந்து மக்களை INDIA கூட்டணி காப்பாற்றும். எங்கள் மீதான அச்சத்தில் பாஜக இன்று ஆலோசனை கூட்டம் நடத்துகிறது என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.