பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனை கூட்டத்தின் 2வது நாள் இன்று (ஜூலை 18). இதே நாளில் பாஜக டெல்லியில் தனது தலைமையில் முதல் கூட்டத்தை கூட்டியுள்ளது. இவர்கள் அனைவருக்கும் ஒரே நோக்கம் 2024 மக்களவை தேர்தல் வெற்றி தான். தொடர்ந்து இரண்டு முறை பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது.
பாஜக ஹாட்ரிக் வெற்றி வியூகம்
வரும் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற காய் நகர்த்தி வருகிறது. இந்நிலையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்றும் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் பிற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிரணியினர் 26 கட்சிகளை அழைத்துள்ள நிலையில், பாஜக 38 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மோடி அலை
இந்த நம்பர் கேம் எந்த அளவிற்கு வேலை செய்யும் என்பது தேர்தல் நேரத்தில் தெரியவரும். குறிப்பாக கடந்த இரு தேர்தல்களை போல இம்முறை மோடி அலை ஒர்க் அவுட் ஆகுமா? பாஜக செல்வாக்கு குறைவாக இருக்கும் தென்னிந்திய மாநிலங்களில் எவ்வாறு வியூகம் வகுப்பர்?
தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை
செல்வாக்கு பெற்ற பிராந்திய கட்சிகள் உடன் சீட் பேரம் எப்படி இருக்கும்? உள்ளிட்டவை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. டெல்லியில் இன்று நடைபெறும் கூட்டத்திற்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். இதில் கலந்து அரசியல் கட்சிகள்,