ஒரு ரூபா சம்பளம் வாங்காமல் மாவீரனுக்கு வாய்ஸ் கொடுத்த விஜய் சேதுபதி: ஆச்சரியத் தகவல்.!

சிவகார்த்திகேயனின் கம்பேக் படமாக மாவீரனை கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். கடந்த வாரம் வெளியான இந்தப்படம் விமர்சனம் மற்றும் வசூல்ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது. இந்நிலையில் ‘மாவீரன்’ பட ரிலீசுக்கு பிறகு இயக்குனர் மடோன் அஸ்வின் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘பிரின்ஸ்’ பட தோல்விக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் மாவீரனுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு நிலவியது. சிவகார்த்திகேயனும் இந்தப்படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என ரிலீசுக்கு முன்பே நம்பிக்கை தெரிவித்திருந்தார். பேண்டஸி ஜானரில் வெளியாகியுள்ள ‘மாவீரன்’ படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. சிவகார்த்திகேயனும் வித்தியாசமான நடிப்பை வழங்கியுள்ளதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

யோகி பாபு நடிப்பில் வெளியான ‘மண்டேலா’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் மடோன் அஸ்வின். கொரோனா காலக்கட்டம் என்பதால் இந்தப்படம் ஓடிடி மற்றும் டிவியில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்தப்படம் தேசிய விருதினையும் வென்றது. தனது முதல் படத்திற்கு கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து தற்போது தன்னுடைய இரண்டாவது படைப்பாக ‘மாவீரன்’ படத்தை இயக்கி பாராட்டுக்களை பெற்று வருகிறார் மடோன் அஸ்வின்.

‘மாவீரன்’ படத்தில் வில்லனாக மிஷ்கினும், அம்மா கதாபாத்திரத்தில் சரிதாவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றனர். அத்துடன் ‘மண்டேலா’ படத்திற்கு பிறகு மாவீரனிலும் யோகி பாபு சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளதாக பாராட்டுக்களை அள்ளி வருகிறார். இந்நிலையில் இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஒரு அசரீரி குரல் கேட்கும். அந்த குரல் தான் பயந்த சுபாவம் கொண்டவராக இருக்கும் ஹீரோவை மாவீரனாக மாற்றுகிறது.

Ileana: கர்ப்பமான இலியானாவின் காதலர் இவரா.?: தீயாய் பரவும் புகைப்படம்.!

இந்த குரலுக்காக நடிகர் விஜய் சேதுபதி வாய்ஸ் கொடுத்துள்ளார். இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இந்தப்படத்திற்கு அவர் குரல் கொடுத்தது குறித்து பேசியுள்ளார் இயக்குனர் மடோன் அஸ்வின். படம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே இந்த குரலுக்காக விஜய் சேதுபதி சார் தான் வாய்ஸ் கொடுக்கணும் என நான் முடிவு பண்ணிட்டேன். அவரிடமும் பேசி ஓகே பண்ணிவிட்டேன். அதன்பின்னர் படம் முடிந்த பிறகு அவரை போய் நானும், தயாரிப்பாளர் அருணும் மீட் பண்ணோம்.

அப்போது சம்பளம் குறித்து பேசும் போது, இது நானும் சிவகார்த்திகேயனும் சேர்ந்து ஒரு விஷயம் பண்றது புதுசா இருக்கும். இன்டஸ்ட்ரில ஒரு விஷயத்தை நம்ம துவங்கி வைக்குறது எனக்கு பெருமையா இருக்கு. இதுக்கு காசு வாங்குவாங்களா? பணத்தை பற்றி பேசவே கூடாது. இது சிவகார்த்திகேயனுக்காகவும், உனக்காகவும் நான் பண்றேன் என விஜய் சேதுபதி கூறியதாக தெரிவித்துள்ளார் மடோன் அஸ்வின். அவர் பகிர்ந்துள்ள இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Thalaivar 171: ரஜினி – லோகேஷ் இணையும் படம் குறித்த சூப்பரான தகவல்: சம்பவம் பெருசா இருக்க போகுது.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.