கடந்த 10 ஆண்டுகளாக ஏன் ஐசிசி கோப்பையை இந்தியா வெல்லவில்லை? பஜ்ஜி சொல்லும் சீக்ரெட்

Cricket World Cup 2023: இந்திய கிரிக்கெட் அணி கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை வென்றதில்லை. கடந்த 2013-ம் ஆண்டு தோனி தலைமையில் இந்தியா ஐசிசி கோப்பையை வென்றது. அதாவது கடைசியாக இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. அதே நேரத்தில், தோனியின் தலைமையில் இந்தியா இதற்கு முன்பு டி20 உலகக் கோப்பை 2017 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை 2011-ஐ வென்றது. இந்த இரண்டு உலகக் கோப்பைகளிலும் இந்திய அணியில் முன்னாள் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இடம் பெற்றிருந்தார். இந்திய அணி பத்தாண்டுகளாக ஐசிசி டிராபி வெல்லாமல் இருப்பதற்கான காரணம் குறித்து ஹர்பஜன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது கடந்த 10 ஆண்டு கால கிரிக்கெட் பயணத்தில் இந்தியா ஐசிசி போட்டிகளில் வெற்றி பெறவில்லை, ஏனெனில் அணி ஒரு யூனிட்டாக விளையாடவில்லை என்று நம்புவதாக ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

கடந்த மாதம் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யூடிசி) இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் உலகக் கோப்பை 2023 தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. நியூஸ் 24 ஸ்போர்ட்ஸ் உடனான உரையாடலின் போது பேசிய ஹர்பஜன், “2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி ஒற்றுமையாக விளையாடினால், அதிசயங்களைச் செய்ய முடியும் என்று கூறியுள்ளார். 

அவரிடம் நீங்கள் இரண்டு முறை உலக சாம்பியன் கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றிருந்தீர்கள். 2013க்கு பிறகு இந்திய அணியால் ஐசிசி கோப்பையை வெல்ல முடியவில்லை. இந்திய அணி ஐசிசி கோப்பையை வெல்ல என்ன செய்ய வேண்டும்? என நினைக்கிறீர்கள் என்று பஜ்ஜியிடம் கேள்வி கேட்கப்பட்டது. 

அதற்கு பதிலளித்த ஹர்பஜன், “எனக்குத் தெரியாது. இதற்கு சரியான பதில் அளிப்பது மிகவும் கடினம். என்னை பொறுத்த வரை நாட்டிற்காக விளையாடும் எந்த வீரரும், எந்த காலத்தில் விளையாடினாலும், நாட்டுக்காக எப்படி நன்றாக விளையாட வேண்டும், எப்படி வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கம் மட்டுமே இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்றார்.

மேலும் ஹர்பஜன் கூறுகையில், 2015-ம் ஆண்டு உலககோப்பை பற்றி பேசினால், நாங்கள் அரையிறுதி வரை முன்னேறினோம். அதேபோல 2019ல் அரையிறுதி போட்டியில் விளையாடினோம். ஆனால் எங்களால் ஐசிசி கோப்பையை வெல்ல முடியவில்லை. அதற்கு காரணம் அழுத்தத்தை எதிர்கொண்டு விளையாடினோம்.  ஆனால் அதில் இருந்து ஒன்று அல்லது இரண்டு வீரர்கள் மட்டுமே அழுத்தத்தை மீறி திறனை வெளிப்படுத்தினார்கள். முக்கியமான போட்டிகளில் ஒரு அணியாக விளையாட வேண்டும். உங்களிடம் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் உள்ளனர். அந்த மூன்று வீரர்களுடன் சேர்த்து மீதமுள்ள எட்டு, ஒன்பது, பத்து வீரர்களும் இருக்கிறார்கள். அனைவரும் ஒன்றாக தங்கள் திறமையை காட்ட வேண்டும். மேலும், சிறிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அணி ஒற்றுமையாக விளையாடும் போது, ​​அது பெரிய சாதனைகளை செய்கிறது. இது தான் டீம் மேனேஜ்மென்ட். உலக கோப்பை வென்ற எங்கள் அணி அந்த சிறப்பை பெற்றிருந்தது என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “இந்த ஆண்டு உலகம் நடக்கும்போது, ​​அணி ஒன்றாக விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். சில வீரர்களின் செயல்திறனைத் தவிர, மற்ற வீரர்களும் சிறிய பங்களிப்புகளைச் செய்ய வேண்டும். ​​​​அது முக்கியம். நியூசிலாந்து அணியில் பெரிய நட்சத்திரங்கள் யாரும் இல்லை ஆனால் அவர்கள் ஒரு அணியாக விளையாடுகிறார்கள். நீங்கள் ஒரு அணியாக விளையாடும் போது, ​​அதிக போட்டிகளில் வெற்றி பெறலாம், தொடர்களையும் வெல்லலாம் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.