சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் பாஜக-வை எதிர்த்து தீவிரமாக களமிறங்கப்போவதாக I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். பெங்களூரில் நடைபெற்ற 26 கட்சிகளின் கூட்டத்திற்குப் பிறகு I.N.D.I.A (இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி) கூட்டணியின் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்தியாவின் 26 முற்போக்குக் கட்சிகளின் தலைவர்களான நாங்கள், அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியா என்ற கருத்தைப் பாதுகாப்பதற்கான எங்கள் உறுதியான தீர்மானத்தை வெளிப்படுத்துகிறோம். நமது குடியரசின் தன்மை பாஜகவால் திட்டமிட்ட முறையில் கடுமையாக தாக்கப்பட்டு வருகிறது. நாம் நமது நாட்டின் […]