கொட்டகலை சி.எல்.எப் வளாகத்திற்கு வருகை தந்த விளையாட்டுதுறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்தை இலங்கையில் ஒரு விளையாட்டாக அங்கீகாரம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து தரப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் உறுதியளித்துள்ளர்.
இலங்கை சிலம்ப சம்மேளனம் மற்றும் இலங்கை பாரம்பரிய கலைகள் ஒன்றியத்தினரால் சி.எல்.எப் கேட்போர் கூடத்தில் சிலம்ப கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனை பாராட்டிய அமைச்சர், சிலம்பத்தை ஒரு விளையாட்டாக அங்கீகாரத்தை பெற்றுக்கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தார்.
இதன்போது இளைஞர் அணியினரின் கோரிக்கைக்கேற்ப மலையகத்தில் இளைஞர்கள் விளையாட்டுத்துறையில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும்இ விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.