தொடக்க பேட்டரான ஜெய்ஸ்வால், இந்திய அணிக்காக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் நம்பிக்கையளிக்கும் எதிர்கால வீரராக உள்ளார். மூன்று நாட்களில் முடிந்த மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, 21 வயதான ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்த 10 ஆண்டுகளுக்கு…
ஜெய்ஸ்வாலின் ஆட்டம் குறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறுகையில், ‘நான் இதற்கு முன் அணி தேர்வாளராக இருந்தேன், எனவே எப்போது ஒரு வீரரை தேர்வு செய்தாலும், அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்காக விளையாடக்கூடியவராக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவரை தேர்வு செய்ய வேண்டும். அவருக்கு நிச்சயமாக ஆற்றல் உள்ளது.
எனக்கு மிக முக்கியமாக, நான் யஷஸ்வியுடன் இதுவரை வேலை செய்யவில்லை. ஐபிஎல் தொடரில் அவர் ரன்களை அடித்த விதத்தை பார்த்தேன், அவர் எவ்வளவு ஆற்றல் வாய்ந்தவர், அவர் எப்படிப்பட்ட ஸ்ட்ரோக்-பிளேயர், சூழ்நிலைக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றியமைப்பது அனைத்தும் வெளிப்பட்டது” என்றார்.