தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள பண்ணைபுரத்தைச் சேர்ந்தவர் செல்லம். இவருக்குச் சொந்தமான தோட்டத்தில் கூலித்தொழிலாளியாக முருகன் என்பவர் பணியாற்றி வந்திருக்கிறார். இவர் நாள்தோறும் இரவு நேரங்களில் தோட்டக் காவல் பணிகளில் ஈடுபடுவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் பணிக்குச் சென்ற முருகன், தோட்டத்தில் இரவு நேரத்தில் உலாவந்த காட்டு யானையால் எதிர்பாராதவிதமாகத் தாக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். அதிகாலை தோட்டப் பணிக்குச் சென்ற தொழிலாளர்கள் தோட்டத் தொழிலாளி உயிரிழந்துகிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, கோம்பை காவல் நிலையம் மற்றும் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
தகவலைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீஸார், உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்கு பதிவுசெய்த கோம்பை போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தோட்டத் தொழிலாளி முருகன் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவலறிந்து உறவினர்கள் கதறி அழுத சம்பவம், அந்தப் பகுதியில் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
அடிக்கடி விளைநிலங்களுக்கு உலா வரும் காட்டு யானைகளை விரட்டவும், இடமாற்றம் செய்வதற்கும் வனத்துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி கோரிக்கை, விடுத்திருக்கின்றனர். யானை