வல்லரசு நாடுகளான அமெரிக்காவும் ரஷ்யாவும் எலியும் பூனையுமாக உள்ளன. மற்ற நாடுகளுடனான தொடர்பில் கூட இருநாடுகளுக்கும் இடையிலான மோதலே வெளிப்பட்டு வருகிறது. தற்போது ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரில் கூட அமெரிக்கா ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகிறது.
ஆரம்பத்தில் இருந்தே உக்ரைனுக்கு ஆயுதங்களை அமெரிக்க அரசு விநியோகம் செய்து வருகிறது. சமீபத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் வேண்டுகளுக்கு இணங்க கொத்து குண்டுகளையும் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. ஆபத்தான கொத்துக்குண்டுகளை உக்ரைனுக்கு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்திருப்பது ரஷ்யாவின் கோபத்தை அதிகரித்துள்ளது.
சுத்திப்போடுங்க… பட்டு சேலையில் அழகு பதுமையாக ராஷி கன்னா.. அசத்தல் போட்டோஸ்!
இந்நிலையில் சிரிய நாட்டு வான் பரப்பில் அமெரிக்க போர் விமானத்தை ரஷ்யா போர் விமானம் மோதுவது போல் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போரில் ரஷ்யா, சிரிய அதிபர் பஷில் அல் அசாத்திற்கு ஆதரவு அளித்து வருகிறது.
ஆரம்பத்தில் குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது. ஆனால், தற்போது சிரியாவில் பதுங்கியுள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் சிரியாவின் வான்பகுதியில் அமெரிக்க போர் விமானங்கள் அடிக்கடி ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறது.
விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினால் ரூ.10,000 பரிசு… அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!
இந்நிலையில் சிரிய வான் பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க MC-12 விமானத்தை ரஷ்யாவின் Su-35 விமானம் வேகமாக மோதுவது போல் வந்து இடைமறித்தது தெரியவந்துள்ளது. ரஷ்யாவின் இதுபோன்ற நடத்தை அமெரிக்க வீரர்களை அச்சுறுத்துவதாகவும் இந்த செய்லகள் விபத்து அல்லது உயிரிழப்புகளுக்கு வழி வகுக்கும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அண்ணாமலை அடிக்கடி வெளிநாடு போறது இதுக்குதான்… பகீர் கிளப்பும் கேஎஸ் அழகிரி!
சமீபத்திய வாரங்களில், ரஷ்ய போர் விமானங்கள் அமெரிக்க ஆளில்லா MQ-9 ட்ரோன்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருவதாகவும் ஆனால் சமீபத்திய சம்பவம் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்றும் காரணம் அது அமெரிக்க உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது என்றும் அமரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.