நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கு: தப்பிய எடப்பாடி பழனிசாமி – ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் 2018 ஜூன் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்திருந்தார்.

, அவரது உறவினர்கள், நண்பர்கள், பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்களுக்கு எதிராக புகார் அளித்திருந்தார். 4800 கோடி ரூபாய் வரை டெண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார்.

இது குறித்து நடவடிக்கை எடுக்காததால் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.

இது குறித்து விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் அந்த தீர்ப்பை செல்லாது என அறிவித்தது.

“பொன்முடியை சந்திக்க அனுமதிக்கவில்லை” ஆர்.எஸ்.பாரதி அதிரடி!

இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் அமர்வில் நடைபெற்றது.

ஜூலை 6ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் ஆஜரான லஞ்ச ஒழிப்பு துறையினர் இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறையால் 2018 சமர்ப்பிக்கப்பட்ட ஆரம்பகட்ட அறிக்கையை ஊழல் கண்காணிப்பாளர் ஏற்க மறுத்துவிட்டார். எனவே மீண்டும் விசாரணை நடத்த அனுமதி அளித்துள்ளார். இதனால் ஆர்.எஸ்.பாரதி தனது வழக்கை திரும்ப பெற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் முறையிடப்ப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, “2018இல் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையிலேயே விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ஆட்சி மாற்றம் காரணமாக புதிதாக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.