சென்னை: அறிமுகப்படமே அஜித்துடன் ஜோடி போட்டு நடித்த மாளவிகா இன்ஸ்டாகிராம் நிச்சல் குளத்தில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
நடிகை மாளவிகா தமிழ் திரைப்படங்களைத் தவிர தெலுங்கு, மலையாளம் , கன்னடம், இந்தி என 5 மொழி படங்களில் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்த விலகி இருக்கும் இவர், இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
நடிகை மாளவிகா: மாடல் அழகியான மாளவிகா தமிழ் , தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். 1999ம் ஆண்டு சுந்தர் சி இயக்கிய உன்னைத்தேடி திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடி சேர்ந்து நடித்தார். இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அழகான நடிகை: உதட்டிலிருந்து பிரியும் லேசான புன்சிரிப்பும், காந்தக் கண்களும் சற்றேறக்குறைய நடிகை ரோஜாவின் சாயலில் வந்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தார் நடிகை மாளவிகா. அழகும் திறமையும் இருந்த போதும் அவருக்கு ஏனோ படவாய்ப்பு சரியாக அமையவில்லை.
பாலிவுட்டில்: தமிழில் படவாய்ப்பு இல்லாததால், தெலுங்கு பக்கம் சென்ற மாளவிகா ஒரு சில படங்களில் நடித்துவிட்டு மீண்டும்தமிழில், சூர்யா நடித்த பேரழகன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். மறுபடியும் தமிழ் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தார். தொடர்ந்து பாலிவுட்டுக்குச் சென்றார். அங்கு சீ யூ எட் 9 என்ற படத்தில் நடித்தார்.
மும்பையில் செட்டில்: சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் படத்தில் வாள மீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம் பாடலில் பட்டையை கிளப்பியிருப்பார். இந்த திரைப்படத்தை அடுத்து ஜீவாவுடன் திருட்டுபயலே திரைப்படத்தில் ஒருவித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படம் வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்படத்தை தொடர்ந்து 2007ல் சுமேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆனார். இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தையும், ஒரு பெண்குழந்தையும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்ட மாளவிகா.
பிகினி அலப்பறை: ஜீவாவின் கோல்மால் படத்தில் நடித்து கொண்டிருக்கும் மாளவிகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் பிகினியில் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த பேன்ஸ், இந்த வயசில் இது தேவையா என்றும், வாவ் சூப்பர் மாலுமா என்றும் அந்த புகைப்படத்திற்கு கீழே கமெண்டுகளை தெரிவிக்கவிட்டு வருகின்றனர்.