தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மின்சார பயன்பாடு தொடர்பான கணக்கீட்டில் குளறுபடிகள் நடப்பதாக வாடிக்கையாளர்கள் புகார்கள் தெரிவித்து வருகின்றனர். வீட்டில் சில மின் உபகரணங்களே இருக்கும் நிலையில் மின் கட்டணம் அதிர்ச்சியூட்டும் அளவிற்கு அதிகமாக வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
திருச்சி – மின்சார வாரிய ஊழியர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம்
Tangedco பிறப்பித்த உத்தரவு
இந்நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், மாவட்ட வாரியாக மின் மீட்டர்கள் பழுதடைந்து காணப்படும் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
பழுதடைந்த மின் மீட்டர்கள்
குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருச்சி, நாகையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீட்டர்கள் பழுதடைந்து காணப்படுகின்றன. இவற்றை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இ-மெயில் மற்றும் ஆய்வு கூட்டங்கள் வாயிலாக தொடர்ச்சியாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அதிகப்படியான மின் பயன்பாடு
ஆனால் பல இடங்களில் பழுதடைந்த மின் மீட்டர்கள் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வருகின்றன. எங்கெல்லாம் மின் மீட்டர்கள் பழுதடைந்து காணப்படுகிறதோ, அங்கெல்லாம் முக்கியத்துவம் அளித்து மாற்று நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும். வழக்கமாக நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களின் மின் தேவை என்பது அதிகமாக இருக்கும்.
மின் கணக்கீட்டில் குளறுபடி
எனவே உடனடியாக புதிய மீட்டர்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் தாமதப்படுத்துவது வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மின் கணக்கீட்டிலும் குளறுபடிகளை உண்டாக்கி வருவாய் இழப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே பிரச்சினைகள் வருவதற்குள் புதிய மின் மீட்டரை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பில்லிங் சைக்கிள் வருவதற்குள் நடவடிக்கை
அடுத்த மின் கட்டணம் செலுத்தும் பில்லிங் சைக்கிள் வருவதற்குள் பணிகளை முடிக்க வேண்டும். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இ-மெயில் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த மின்சார வாரியம் திட்டமிட்டு வருகிறது. இதன்மூலம் மின் கணக்கீட்டாளர்கள் நேரில் வர வேண்டிய அவசியமே இருக்காது.
ஸ்மார்ட் மற்றும் ப்ளுடூத் மீட்டர்கள்
மின் பயன்பாட்டை அளவிடுவதிலும் தவறுகள் வராது. எவ்வளவு பயன்படுத்தி இருக்கிறோமோ, அதற்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும். இதற்கிடையில் ப்ளுடூத் மீட்டர்களை சோதனை முறையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் பழைய மின் மீட்டர்களை மாற்ற தமிழகம் முழுவதும் அதிரடி உத்தரவு பறந்துள்ளது.