Rajinikanth: மாலத்தீவுகள் பீச்சில் சில்லிங் செய்யும் ரஜினி: ஷார்ட்ஸ், டி சர்ட்டில் செம கூல்

Maldives: மாலத்தீவு கடற்கரையில் ரஜினிகாந்த் நடந்து சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

​மாலத்தீவுகள்​Rajinikanth: தொடர்ந்து ஒரே ஷூட்டிங்: ஓய்வெடுக்க மாலத்தீவுகளுக்கு சென்ற ரஜினிஜெயிலர், லால் சலாம் என தொடர்ந்து படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையடுத்து அடுத்த பட வேலையை துவங்கும் முன்பு ஓய்வு எடுக்க மாலத்தீவுகளுக்கு சென்றிருக்கிறார். அவர் மாலத்தீவுகளுக்கு சென்றது யாருக்கும் தெரியாது. ரஜினியை தங்கள் விமானத்தில் பார்த்த விமான நிறுவனம் குஷியாகி அவரை புகைப்படம் எடுத்து தங்களின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டது. அதை பார்த்து தான் ரஜினிகாந்த் மாலத்தீவுகளுக்கு சென்றது அனைவருக்கும் தெரிந்தது.உதயநிதி ஸ்டாலின்​உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…​​ரஜினிகாந்த்​மாலத்தீவுகளில் இருக்கும் கடற்கரை ஒன்றில் காலில் செருப்பு இல்லாமல் ரிலாக்ஸாக நடந்து சென்றிருக்கிறார் ரஜினிகாந்த். ஷார்ட்ஸ், டி சர்ட்டில் ரஜினி காத்தாட நடந்து சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது, 73 வயதில் இப்படி ஃபிட்டாக இருக்க வேறு யாராலும் முடியாது. தலைவர் பாவம், ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு இந்த பிரேக் கண்டிப்பாக தேவை தான். நன்றாக ஓய்வெடுத்துவிட்டு வாங்க தலைவரே. நிறைய வேலை இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.
​ஹுகும்​ரஜினிகாந்த் மாலத்தீவுகளில் இருக்கும் நேரத்தில், ஜெயிலர் படத்தில் வரும் ஹுகும் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அந்த பாடலுக்கு இசையமைத்திருப்பதுடன் பாடவும் செய்திருக்கிறார் ரஜினி வெறியனான அனிருத். ஜெயிலர் படத்தில் ரஜினியை நெல்சன் காட்டியிருக்கும் விதம் தான் அனைவருக்கும் பிடித்திருக்கிறது. தலைவரை இப்படி கெத்தா, மாஸா பார்க்கவே எவ்ளோ நல்லா இருக்கு என ரசிகர்கள் கண்ணில் தண்ணீர் வைத்துக் கொண்டார்கள்.
​ஆகஸ்ட் ரிலீஸ்​Rajinikanth: ஜெயிலர் நெல்சனை திட்டாதீங்க: அந்த ஐடியா ரஜினி கொடுத்ததாம்ஜெயிலர் முத்துவேல் பாண்டியனாக ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் ஜூலை 28ம் தேதி ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடக்கவிருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் ரஜினி என்ன சொல்லப் போகிறார் என்பதே கேட்கவே பலரும் ஆவலாக உள்ளனர்.

​காவாலா பாட்டி​ஜெயிலர் படத்தில் வரும் காவாலா பாடல் ஏற்கனவே பட்டிதொட்டி எல்லாம் பிரபலமாகிவிட்டது. குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை காவாலா காவாலானு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் காவாலா பாடலுக்கு பாட்டியும், பேரனும் சேர்ந்து ஆடிய டான்ஸ் வீடியோ தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டது. அந்த வீடியோவை பார்த்த தமன்னாவே இது தான் பெஸ்ட் என கூறியிருக்கிறார்.
பாட்டி​​​தலைவர் படங்கள்​ஜெயிலரை அடுத்து ஜெய்பீம் படம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் அந்த படத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். லால் சலாமை அடுத்து தலைவர் 170 படத்திலும் ரஜினிகாந்த் இஸ்லாமியராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தலைவர் 170 படத்தை முடித்த பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171ல் நடிக்கிறார் ரஜினி.

​Vettaiyaadu Vilaiyaadu: மாமன்னன், மாவீரன் வந்தும் கெத்து குறையாத வேட்டையாடு விளையாடு: அசால்டா 25 நாட்களை கடந்த கமல் படம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.