Riots in Chhattisgarh by those who ran naked towards the Assembly | சட்டசபை நோக்கி நிர்வாண ஓட்டம் நடத்தியவர்களால் சத்தீஸ்கரில் பரபரப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் போலி சாதி சான்றிதழ் கொடுத்து அரசுப்பணி நியமனம் பெற்றவர்கள் மீது நடவடிக்கை கோரி சட்டசபை நோக்கி நிர்வாண ஓட்டம் நடத்தியவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு பணி நியமனத்தில் எஸ்.சி.எஸ்.டி., பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி போலியாக எஸ்.சி. எஸ்.டி., சாதி சான்றிதழ் பெற்று 267 பேர் அரசு பணி நியமனம் பெற்றதாக புகார் எழுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த சிலர் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் விரக்தி அடைந்தனர்.

latest tamil news

இந்நிலையில் மாநில சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் இன்று (18 ம் தேதி) துவங்கியது. இதையறிந்த பாதிக்கப்பட்ட 12 க்கும் மேற்பட்டோர் அரசின் கவனத்தை ஈர்ப்பதாக கூறி சட்டசபை நோக்கி நிர்வாண ஓட்டம் நடத்தினர். இதன் புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பல்வேறு பிரிவுகளின் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.