Successive deaths of tigers: Park administrators transferred | அடுத்தடுத்து சிவிங்கிப்புலிகள் இறப்பு : பூங்கா நிர்வாகிகள் பணியிடமாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

போபால்: அடுத்தடுத்து சிவிங்கிப்புலிகள் இறப்பு சம்பவத்தையடுத்து குனோ தேசிய பூங்கா நிர்வாகி அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

மத்திய அரசு கடந்த ஆண்டு ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து எட்டு சிவிங்கி புலிகளும், தென்ஆப்ரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகளும், கொண்டு வரப்பட்டு. மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.

latest tamil news

இவை அனைத்தும் நன்கு பராமரிக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச்சில் ஜுவாலா சிவிங்கிபுலி நான்கு குட்டிகளை ஈன்றதில், மூன்று குட்டிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. அதேபோல் சாஷா எனும் பெண் சிவிங்கி புலி, உதய் என்ற ஆண் சிவிங்கி புலி, தக் ஷா என்ற பெண் சிவிங்கிபுலி, தேஜாஸ் என்ற ஆண் சிவிங்கி புலி , சூரஜ் என்ற சிவிங்கிப்புலி என கடந்த 4 மாதங்களில் 8 சிவிங்கி புலிகள் இறந்தன.

இந்நிலையில் குனோ தேசியபூங்கா பராமரிப்பு நிர்வாக அதிகாரிகள் மற்றும் வன அலுவலர்கள் உள்ளிட்ட சிலர் எவ்வித காரணம் இன்றி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.