கவுதம் மேனன் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன், ஜோதிகா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்த வேட்டையாடு விளையாடு படம் கடந்த 2006ம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது. டிசிபி ராகவனாக வந்த கமலின் கதாபாத்திரம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இந்நிலையில் அந்த படத்தை கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி மீண்டும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்தார்கள்.
உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…
வேட்டையாடு விளையாடு படம் வந்த அன்று தலைநகரம் 2, ரெஜினா, அஸ்வின்ஸ் உள்பட 7 படங்கள் ரிலீஸாகின. புதுப்படங்கள் வந்த போதிலும் வேட்டையாடு விளையாடு படம் பார்க்க தியேட்டர்களுக்கு ரசிகர்கள் படையெடுத்தார்கள்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
பல ஆண்டுகள் கழித்து ரிலீஸான படம், சில நாட்கள் ஓடிவிட்டு காணாமல் போய்விடும் என்று நினைத்தவர்களை வியக்க வைத்துவிட்டது வேட்டையாடு விளையாடு. புதுப்படங்களே ஒரிரு வாரங்களை கடக்க கஷ்டப்படும் இந்த நேரத்தில், வேட்டையாடு விளையாடு படம் அசால்டாக 25 நாட்களை கடந்துவிட்டது.
கவுதம் மேனன் இயக்கத்தில் கமல் என்னமா நடித்திருக்கிறார். படம் பார்க்கும் ஃபீலே தனி என தியேட்டர்களுக்கு செல்பவர்கள் கூறி வருகிறார்கள். வேட்டையாடு விளையாடு படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பார்த்து பல பழைய படங்களை டிஜிட்டலில் மீண்டும் ரிலீஸ் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.
வேட்டையாடு விளையாடு மீண்டும் ரிலீஸான நிலையில் 25 நாட்களை கடந்தது பெரிய விஷயமாக பார்க்கப் படுகிறது. இந்நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சி நடந்து வருகிறது.
வேட்டையாடு விளையாடு 2 படம் பற்றி கவுதம் மேனன் கூறியதாவது, லாக்டவுனுக்கு முன்பே கமல் சாரை சந்தித்து இரண்டாம் பாகம் குறித்து பேசினேன். ஸ்க்ரிப்ட்டை தயார் செய்துவிட்டு வருமாறு கூறினார் என்றார்.
நிதி பிரச்சனையில் சிக்கிய கவுதம் மேனன் தற்போது பிற நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். அவரை விரைவில் கமல் பட இயக்குநராக பார்க்க ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.
Rajinikanth: ஜெயிலர் நெல்சனை திட்டாதீங்க: அந்த ஐடியா ரஜினி கொடுத்ததாம்
ஆண்டவர் தான் பிற நடிகர்களின் படங்களை பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறாரே. அப்படியே அவரே வேட்டையாடு விளையாடு 2 படத்தையும் தயாரித்தால் அற்புதமாக இருக்கும். கண்டிப்பாக போட்ட பணத்தை பல மடங்கு எடுத்துவிடலாம் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்து வருகிறார்கள்.
கமல் ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் இந்தியன் 2 படம் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. படத்தை அடுத்த ஆண்டின் துவக்கத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே இந்தியன் படத்தை மீண்டும் ரிலீஸ் செய்தால் நன்றாக இருக்குமே. கமலை கொண்டாடும் 2கே கிட்ஸுகளும் இந்தியனை பெரிய திரையில் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என பேச்சு கிளம்பியிருக்கிறது.
இந்தியன் தாத்தா கெத்து காட்டியதை யாரும் இன்னும் மறக்கவில்லை. இந்நிலையில் இந்தியன் 2 ரிலீஸுக்கு முன்பு இந்தியன் படத்தை மீண்டும் ரிலீஸ் செய்தால் நன்றாகத் தான் இருக்கும்.