சென்னை: புராஜெக்ட் கே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி ஒருவரான நடிகர் பிரபாஸ் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு இந்திய அளவில் முன்னணி நட்சத்திர நடிகராக உயர்ந்தார்.
பாகுபலி படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
அடுத்தடுத்த தோல்வி: அப்படி பெரும் எதிர்பார்ப்போடு வெளிவந்த பிரபாஸின் சாஹோ திரைப்படம் மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து, ராமாயண கதைக்களத்தைக் கொண்டு பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பிரம்மாண்டமான ஆதிபுருஷ் திரைப்படம், தொடர் ஏமாற்றங்களை கொடுத்தது.
பாஸின் ப்ராஜெக்ட் கே பர்ஸ்ட் லுக்
சாலர்: பிரபாஸின் படங்களுக்கு பிரேக் கொடுத்து ரசிகர்களை திருப்தி படுத்துமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வசூல் ரீதியில் வரவேற்பை பெற்ற போதும் ரசிகர்களுக்கு ஆதிபுருஷ் திரைப்படமும் பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக கே ஜி எஃப் படங்களின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படத்தில் வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ப்ராஜெக்ட் கே: இந்த வரிசையில் பிரபாஸ் நடிப்பில் அடுத்து தயாராகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் தான் ப்ராஜெக்ட் கே. வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் பக்கா சயின்ஸ் ஃபிக்சன் ஆக்சன் திரில்லர் படமாக உருவாகும் இந்த ப்ராஜெக்ட் திரைப்படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க, முன்னணி கதாபாத்திரங்களில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், உலக நாயகன் கமல்ஹாசன், தீபிகா படுகோனே மற்றும் திஷா பதானி ஆகியோர் நடித்துள்ளனர். மகாநதி திரைப்படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற இயக்குனர் நாக் அஸ்வின் ப்ராஜெக்ட் கே திரைப்படத்தை இயக்குகிறார்.
கிண்டலடிக்கும் பேன்ஸ்: ப்ராஜெக்ட் கே திரைப்படத்தின் முதல் அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் ப்ராஜெக்ட் கே திரைப்படத்தின் முதல் டீசர் வீடியோவிற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்தனர். சர்ப்ரைஸாக புராஜெக்ட் கே படத்தின் நாயகன் பிரபாஸின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குகுழு வெளியிட்டநிலையில் அந்த போஸ்டரை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், இதென்ன ஆதிபுருஷும், அவெஞ்சர்ஸும் சேர்ந்த மாதிரி கலவையா இருக்குனு கிண்டலடித்து வருகின்றனர். ரசிகர்களை அப்செட் ஆக்கும் வகையில் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது.