மோடியை பார்த்தும் பயப்பட மாட்டேன்.. ஈடியை பார்த்தும் பயப்பட மாட்டேன்.. உதயநிதி ஸ்டாலின் வெறித்தனம்

சென்னை:
“மோடியை பார்த்தும் பயப்பட மாட்டேன்.. உங்க ஈடியை (அமலாக்கத்துறை) பார்த்தும் பயப்பட மாட்டேன். என் வீட்டுக்கு ரெய்டு வா பார்க்கலாம்” என்று தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர்

சவால் விடுத்துள்ளார்.

பொன்முடிக்கு அடுத்தது யார் வீட்டில் ரெய்டு- Crime Muthaleef interview

அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வரும் நிலையில், அடுத்த ரெய்டு உதயநிதி ஸ்டாலின் வீட்டில்தான் என பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று நடந்த

பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:

பாஜக காரங்க சொல்லிட்டு இருக்காங்க. அடுத்த அமலாக்கத்துறை ரெய்டு என்னோட வீட்லதானாம். வா.. என்னோட அட்ரஸ் வேணும்னாலும் கொடுக்குறேன். உங்க ஈடிக்குலாம் (அமலாக்கத்துறை) பயப்படுற ஆளா நான். நான் யாரு.. நான் கலைஞர் பேரன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினோட மகன். நான் உங்க மோடியை பார்த்தும் பயப்பட மாட்டேன். உங்க ஈடியை பார்த்தும் பயப்பட மாட்டேன். எனக்கு மடியிலும் கனம் கிடையாது. வழியிலும் பயம் கிடையாது. நான் சவால் கூட விடுறேன். வா.. எப்போ வேணா வா. ஆனா சொல்லிட்டு வா.

உங்களுக்கு எல்லாம் தெரியும். திமுகவில் பல அணிகள் இருக்கின்றன. மாணவரணி, இளைஞரணி, மகளிர் அணி அப்படின்னு நிறைய அணிகள் இருக்கிறது. அதிமுகவில் அணிகள் இருக்கு. எடப்பாடி அணி, ஓபிஎஸ், சசிகலா அணி, சசிகலா டிரைவர் அணி, தீபா அணி என நிறைய அணிகள் இருக்கிறது. ஆனால் பாஜகவில் என்னென்ன அணிகள் இருக்கு தெரியுமா? அமலாக்கத்துறை அணி, சிபிஐ அணி, ஐடி அணி என நிறைய இருக்கிறது. தேர்தல் நேரத்துல இந்த அணிகள் எல்லாம் களம் இறங்க ஆரம்பிச்சிடும். இப்போ அதுதான் நடந்துட்டு இருக்கு.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, அவர்களின் அணிகளான சிபிஐ, ஈடி, ஐடி ஆகியவை 95 சதவீதம் அளவுக்கு எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டில் ரெய்டு நடத்தி இருக்கின்றன. இதில் பல தலைவர்கள் மீது வழக்குகளும் பதிவாகின. அதே வேளையில், பாஜகவின் மிரட்டலுக்கு பயந்து அந்தக் கட்சியில் சேர்ந்துவிட்டால் அவர்கள் புனிதராகி விடுவார்கள். அவர்கள் மீதான வழக்குகள் ரத்தாகிவிடும். இதுதான் ஒன்றிய பாசிச பாஜக ஆட்சியின் லட்சணம். நீங்க எந்தக் கட்சியை வேண்டுமானாலும் மிரட்டி இருக்கலாம். ஆனால், உங்க பம்மாத்து வேலையெல்லாம் திமுகவிடம் எடுபடாது. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.