சென்னை: விஜய் டிவியில் ரசிகர்களை கவர்ந்த தொடர்களில் ஒன்றாக உள்ளது பாரதி கண்ணம்மா 2. இந்தத் தொடர் கடந்த பிப்ரவரி மாதத்தில்தான் துவங்கியது.
முதல் சீசனிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கிராமத்து கதைக்களத்தில் இந்தத் தொடர் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
விரைவில் இந்தத் தொடர் என்ட் கார்ட் போடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது தொடர் பரபரப்பான எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது.
ஆசையாய் தொட வந்த பாரதியிடம் கண்ணம்மாவின் செயல்: விஜய் டிவியில் ரசிகர்களை கவர்ந்த தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா 2 இருந்து வருகிறது. இந்தத் தொடரின் முதல் சீசன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் நிறைவடைந்தது. சில தினங்களிலேயே சீரியலின் இரண்டாவது சீசன் துவங்கியது. முதல் சீசனைபோல இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட கிராமத்து கதைக்களத்தில் இந்தத் தொடர் தன்னுடைய ஒளிபரப்பை வழங்கி வருகிறது.
கண்ணம்மா மீது காதல் கொள்ளும் பாரதி, தன்னுடைய இயல்பிலிருந்து முற்றிலும் மாறி, சிறப்பான இளைஞனாக மாறுகிறான். தொடர்ந்து கண்ணம்மாவின் காதலுக்காக அதிகமாக முயற்சிகளை மேற்கொண்டு, அவரது காதலையும் பெறுகிறார். இதனிடையே, வெண்பாவின் சூழ்ச்சிக்கு பலியாகும் சவுந்தர்யா, பாரதியை மிரட்டி வெண்பா -பாரதி நிச்சயதார்த்தத்தை நடத்தி வைக்கிறார். தொடர்ந்து கண்ணம்மமாவுடன் பாரதியின் காதல் குறித்து அறிந்துக் கொள்ளும் சவுந்தர்யா, வெண்பா -பாரதி திருமணத்திற்கும் ஏற்பாடு செய்கிறார்.
இதனிடையே, கண்ணம்மாவை சமாதானப்படுத்தி பாரதி அவருடன் தன்னுடைய திருமணத்தையும் நடத்தி முடிக்கிறார். இதனால் சவுந்தர்யா, வெண்பா உள்ளிட்டவர்களின் கோபத்திற்கு ஆளாகிறார். பாரதி மற்றும் கண்ணம்மாவை வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டேன் என்று தீக்குளிக்க போகிறார் சவுந்தர்யா. இதையடுத்து அவர்கள் வீட்டின் தோட்டத்திலேயே டென்ட் போட்டு கண்ணம்மாவுடன் தங்குகிறார் பாரதி.
இந்த புதுமண ஜோடி நிலாவை ரசித்து கதை பேசிவிட்டு, டென்ட்டிற்கு தூங்க செல்கிறது. இரவில் தன்னுடைய ஆசை மனைவி மீது கை போடுகிறார் பாரதி. ஆனால் உடனே கண்ணம்மா அலறித் துடிக்கிறார். கத்தி கூப்பாடு போடுகிறார். இதனால் இதனால் சவுந்தர்யா, மாமா, வெண்பா என அனைவரும் அங்கே வந்துவிடுகின்றனர். அவர்களை ஒருவாராக சமாளித்து அனுப்பி வைக்கிறார் பாரதி. கண்ணம்மாவிற்கு சிறுவயதில் ஏற்பட்ட மோசமான அனுபவம் காரணமாகவே அவர் இப்படி நடந்துக் கொண்டதை யூகிக்கிறார்.
தொடர்ந்து அவர் டென்டிற்கு வெளியில் படுத்துக் கொள்கிறார். கொசுக்கடியுடன் இரவு முழுவதும் போராடிக் கொண்டிருக்கிறார்.மறுநாள் காலையில் தோட்டத்தின் பக்கம் வரும் சவுந்தர்யா, தன்னுடைய மகன், கொசுக்கடியுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதை பார்க்கிறார். அவருக்குள் ஆற்றாமை வெளிப்படுகிறது. தன்னுடைய அம்மா தன்னையும் தன்னுடைய மனைவியையும் ஒருவார காலத்தில் ஏற்றுக்கொண்டு வீட்டிற்குள் அனுமதிப்பார் என்று பாரதி சபதம் செய்துள்ள நிலையில், இவ்வாறாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.