வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சக வீரரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டு உள்ள ஒலிம்பிக் மல்யுத்த வீரர் மல்யுத்த வீரர் சுஷில்குமாருக்கு டில்லி கோர்ட் ஜாமின் வழங்கியது.
இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார்(37) ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்றவர். முன்னாள் ஜூனியர் சாம்பியன் சாகர் ராணா கொலை வழக்கில், தேடப்படும் குற்றவாளியாக டில்லி போலீசாரால் அறிவிக்கப்பட்டார். இவர் மீது ஜாமினில் வெளியே வர முடியாத ‘பிடிவாரன்ட்’ பிறப்பித்ததையடுத்து கடந்த 2021-ம் தேதி இவரை பஞ்சாப் போலீசார் கைது செய்து டில்லி போலீசிடம் ஒப்படைத்தனர். டில்லி குற்றப்பிரிவு சிறப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்த சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தனது முழங்கால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி டில்லி ரோஹினி கோர்ட்டில் ஜாமின் கோரி சுஷில்குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டில்லி ஐகோர்ட் அவரது மருத்துவ அறிக்கையை பெற்று, நிபந்தனையுடன் ஒரு வார காலம் ஜாமின் வழங்கியது
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement