TVS iQube Electric – குறைந்த விலை ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கும் டிவிஎஸ் மோட்டார்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஓலா எஸ் 1 ஏர், வரவிருக்கும் ஏதெர் 450S போன்ற குறைந்த விலை மாடல்களுக்கு சவால் விடுக்கும் வகையில் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அடிப்படையில் குறைந்த வசதிகள் மற்றும் ரேன்ஜ் பெற்ற மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஓலா எஸ் 1 ஏர் நடப்பு ஜூலை மாத இறுதியில் டெலிவரி துவங்கப்பட உள்ள நிலையில், இதற்கு போட்டியாக ஏதெர் 450எஸ் ஆகஸ்ட் முதல் வாரத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

TVS iQube Electric

ஃபேம் 2 மானியம் ரூ.30,000 வரை குறைக்கப்பட்டதை தொடர்ந்து மின்சார பேட்டரி ஸ்கூட்டர்களை விலை உயர்ந்த காரணத்தால் கடந்த மாதம் பேட்டரி ஸ்கூட்டர் விற்பனை சரிவடைந்துள்ளது.

தற்பொழுது விற்பனையில் உள்ள iQube ஆரம்ப நிலை STD மற்றும்  iQube S இரண்டும் 3.04 kWh பேட்டரி கொண்டுள்ளது. ஆனால் டாப் மாடல் ஐக்யூப் எஸ்டி அறிவிக்கப்பட்டாலும் இன்னும் விற்பனையில் இல்லை இதில் 4.56 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மீண்டும் குறைந்த விலை மாடல் என்றாலும், 3.04 kWh பேட்டரி பெற்று குறைவான வசதிகள் கொண்டிருக்கலாம்.  ஆனால் புதிய மாடல் எப்பொழுது வரும் என்ற உறுதியான தகவல் இல்லை.

வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி க்ரியோன் அடிப்படையில் டிவிஎஸ் என்டார்க் எலக்ட்ரிக் வரவுள்ளது.

புதிய டிவிஎஸ் ஐக்யூப்  தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியல்

TVS iQube  – ₹ 1,41,248

TVS iQube S – ₹ 1,56,355

source

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.