எடப்பாடியின் கூட்டணி கணக்கு, இது நடந்தா போதும் ஜெயிச்சுடலாம்! பாஜக வைக்கும் ட்விஸ்ட்!

அதிமக கடந்த சட்டமன்றத் தேர்தலில் வடக்கு மாவட்டங்களில் பெரியளவில் வெற்றியைப் பெறாவிட்டாலும் மேற்கு மாவட்டங்களில் பெற்ற வெற்றிக்கு பாமகவும் மறைமுக காரணமாக இருந்தது என எடப்பாடி பழனிசாமி நினைப்பதாக சொல்கிறார்கள்.

தேசிய ஜனநாயக கூட்டணி: ஒரே நாளில் மாறும் டெல்லி முகம்!மக்களவைத் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்துக்கு அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி அழைக்கப்பட்டு அவருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டது கவனம் பெற்றது. இதனால் ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டி எடப்பாடி பழனிசாமியுடன் டெல்லி சுமுக உறவை பேணுவதாக கூறப்பட்டது. ஆனால் மறுநாளே அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை அழைத்து இந்த பக்கமும் தங்கள் பார்வை இருப்பதை பாஜக காட்டியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தீவிர யோசனை!தேர்தல் சமயத்தில் ஓபிஎஸ்ஸை கட்சியிலோ அல்லது கூட்டணியிலோ இணைக்கச் சொல்லி பாஜக நிர்பந்திக்க வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். அதேபோல் டிடிவி தினகரனின் அமமுகவையும் அழைத்து வந்து இரண்டு சீட்டுகள் ஒதுக்குங்கள் என்று சொல்லவும் வாய்ப்பிருக்கிறது. எனவே அதை எப்படி சமாளிப்பது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு யோசிக்கத் தொடங்கி விட்டது.
எடப்பாடி பழனிசாமியின் கூட்டணி கணக்கு!கூட்டணியில் யார் வருகிறார்களோ இல்லையோ பாமக கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறாராம். தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பாமக கலந்துகொண்டது எடப்பாடிக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளதாம். திமுக கூட்டணி வலிமையாக உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் பாமக இல்லாவிட்டால் வட மாவட்டங்களில் கரையேறுவது கடினம் என எடப்பாடி பழனிசாமி நினைக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் சேலம் உள்ளிட்ட மேற்கு பகுதிகளிலும் உள்ள வன்னியர் சமூக வாக்குகளைப் பெற பாமக அவசியம் தேவை என்பது எடப்பாடி பழனிசாமியின் கணக்கு.
மக்களவைத் தேர்தல் 2024 எப்படி இருக்கும்?பாமகவை பொறுத்தவரை அதிமுக – பாஜக கூட்டணியில் மீண்டும் இணைவதில் ராமதாஸுக்கு விருப்பம் தானாம். ஆனால் அன்புமணி ராமதாஸ் திமுக கூட்டணி பக்கம் கவனத்தை திருப்புகிறாராம். இதனாலே தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்துக்கு தான் செல்லாமல் மூர்த்தியை அனுப்பியிருக்கிறாராம். இருந்தப்போதும் திமுக கூட்டணியும் ஹவுஸ்ஃபுல்லாக இருப்பதால் 2019 கூட்டணியே மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.