ஓபன்ஹெய்மர் படத்துக்காக பகவத் கீதை படித்தேன்.. கிறிஸ்டோபர் நோலன் பட ஹீரோ சொன்ன சூப்பர் தகவல்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஓபன்ஹெய்மர் படம் ஜூலை 21ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. அதன் ப்ரீமியர் காட்சிகளுக்காக அந்த படத்தில் நடித்த சிலியன் மர்பி, ராபர்ட் டவுனி ஜூனியர் மற்றும் மேட் டேமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

மெமென்டோ, இன்செப்ஷன், இன்டர்ஸ்டெல்லார், டெனெட் என புரியாத புதிர்களை கொண்ட படங்களை புதிர் போட்டியே இயக்கி வரும் புத்திசாலி இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன் தற்போது அணுகுண்டின் தந்தை என அழைக்கப்படும் ராபர்ட் ஓபன்ஹெய்மரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய பகுதிகளை படமாக இயக்கி உள்ளார்.

இந்த படத்துக்காக ஹீரோ சிலியன் மர்பி பகவத் கீதையை படித்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய நிலையில், அந்த புத்தகத்தின் மகத்துவங்களையும் அவர் அடுக்கி உள்ளார்.

அணு ஆயுத வெடிப்பை பார்க்க ரெடியா: இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட அணு ஆயுதத்தை கண்டுபிடித்ததில் முக்கிய பங்காற்றிய இயற்பியலாளர் ராபர்ட் ஓபன்ஹெய்மரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி உள்ள ஓபன்ஹெய்மர் படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

இந்த வாரம் வெளியாகும் ஹாலிவுட் படங்களிலேயே ஓபன்ஹெய்மர் மற்றும் பார்பி படத்துக்கு இடையே பெரிய போட்டியே வெடித்துள்ளது. எப்படி இருந்தாலும், கிறிஸ்டோபர் நோலனின் படத்தை பார்க்கவும் சிஜி காட்சிகளே இல்லாமல் ரியல் அணுகுண்டையே வெடிக்கச் செய்து படமாக்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், அணுகுண்டு வெடிப்பை காணவும் அதன் ஆபத்தை உணரவும் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

Cilian Murphy reads Bhaghavat Gita for acting in Oppenheimer

பகவத் கீதையை படித்த ஹீரோ: 1940ம் ஆண்டு முதல் அணுகுண்டு சோதனை நடந்த உடனே பகவத் கீதையில் உள்ள வாசகத்தை ஓபன்ஹெய்மர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ஓபன்ஹெய்மராக நடிக்க வேண்டிய நிலையில், நடிகர் சிலின் மர்பியும் தானும் பகவத் கீதையை படித்து அந்த கதாபாத்திரத்துக்காக தன்னை தயார்ப்படுத்திக் கொண்டேன் எனக் கூறியுள்ளார்.

பகவத் கீதை ஒரு அழகான பொக்கிஷம், அதில் வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல கருத்துக்கள் பொதிந்து கிடக்கின்றன என சிலின் மர்பி பேசியுள்ளார். ஓபன்ஹெய்மர் தீவிர பகவத் கீதை வாசிப்பாளர் என்பதால், அந்த கதாபாத்திரத்துக்காக பகவத் கீதையை படித்து தன்னை மெருகேற்றியிருக்கிறார் சிலின் மர்பி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.