தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பழைமை வாய்ந்த அம்மன் தலங்களில் ஒன்று குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில். தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து 3 கி.மீ தூரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது இந்தக் கோயில். ராமாயணத்தலத்தோடு தொடர்புடைய இந்த முத்துமாலை அம்மன் கோயில் இந்தப் பகுதியில் மிகவும் பிரசித்தம். இங்கு வந்து முத்துமாலை அம்மனை வேண்டிக்கொண்டால் அனைத்துத் துன்பங்களும் தீரும் என்பது நம்பிக்கை. வாருங்கள் அந்த அற்புதத் தலத்தை தரிசனம் செய்வோம்.