சிறுநீர் கழிக்க போனதால் ரூ.6 ஆயிரம் இழப்பு.. வந்தே பாரத் ரயிலால் நொந்து போன பயணி

போபால்: ரயில்வே நிலையத்தில் நின்றுகொண்டிருந்த வந்தே பாரத் ரயிலில் சிறுநீர் கழிப்பதற்காக பயணி ஒருவர் ஏறிவிட்டு கடைசியில் ரூ.6 ஆயிரத்தை அவர் இழுந்துள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. இது குறித்த விவரங்களை இங்கே பார்ப்போம்.

நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயிலின் தோற்றம் புல்லெட் ரயில் போன்று இருப்பதோடு, ரயிலில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைய உள்ளன. இதில் ஜிபிஎஸ் டிராக்கர் வசதி, கேமரா வசதி, ஏசி வசதி என அனைத்தும் உள்ளது. பயணிகளுக்கு பல்வேறு சொகுசு வசதிகள் இருப்பதால் வந்தே பாரத் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதனால், மேலும் பல வழித்தடங்களில் வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. வந்தே பாரத் ரயிலை பொறுத்தவரை வழக்கமான எக்ஸ்பிரஸ் ரயிலை விட பல மாற்றங்களை கொண்டது. வந்தே பாரத் ரயிலின் என்ஜின் தனியாக இல்லாமல் ரயில் பெட்டியுடன் இணைந்தே இருக்கும். அது மட்டும் இன்றி முழுவதும் தானியங்கி வசதியை கொண்டது. இதனால், ரயிலின் டிரைவர் நினைத்தால் மட்டுமே கதவுகளை திறக்க முடியும்.

ரயிலின் கதவுகளை பயணிகளால் எக்காரணம் கொண்டும் திறக்க முடியாது. இதை அறியாத பல பயணிகள் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்ட புதிதில் செல்பி எடுக்க ஆசைப்பட்டு ரயிலுக்குள் சிக்கிய சம்பவங்களும் நடந்தன. அதேபோல் பயணிகள் சிலரும் ரயில் நிலையங்களில் ரயில் நிற்கும் போது பிளாட்பார்மில் இறங்கிவிட்டு பிறகு கதவுகள் மூடிக்கொண்டதால் ரயிலில் இருந்து இறங்க முடியாமல் சிக்கி தவிக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.

தற்போது மத்திய பிரதேசத்தில் இதேபோன்ற ஒரு நிகழ்வுதான் நடைபெற்றுள்ளது. அவசரமாக சிறுநீர் கழிப்பதற்காக வந்தே பாரத் ரயிலில் ஏறி, 6 ஆயிரத்தை பயணி ஒருவர் இழந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த விவரங்களை பர்ப்போம். ஐதராபாத்தை சேர்ந்த வியாபாரி அப்துல் காதிர். உலர்பழங்களை விற்கும் கடை நடத்தி வரும் அப்துல் காதிர் தனது மனைவி மற்றும் 8 வயது மகனுடன் மத்திய பிரதேச மாநிலம் சிங்குரலி பகுதிக்கு ரயில் மூலம் செல்ல திட்டமிட்டு இருந்தார்.

இதற்காக ஐதரபாத்தில் இருந்து போபாலுக்கு ரயிலில் வந்தார். போபால் ரயில் நிலையத்தில் சிங்குரலி செல்லும் ரயிலுக்காக பிளாட்பார்மில் அப்துல் காதிர் காத்திருந்தார். அப்போது அவர் நின்ற பிளாட்பார்மில் வந்தே பாரத் ரயில் வந்து நின்றுள்ளது. அப்துல் காதிருக்கு அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டி இருந்ததால் வந்தே பாரத் ரயிலின் கழிவறைக்கு சென்று இயற்கை உபாதையை கழிக்க திட்டமிட்டு அதில் ஏறி இருக்கிறார்.

அவர் ரயிலுக்குள் ஏறி சிறுநீர் கழித்துவிட்டு திரும்புவதற்குள் ரயிலின் கதவுகள் மூடிவிட்டது. இதனால், இறங்க முடியாமல் தவித்துள்ளார். அதற்குள் ரயிலும் கிளம்பிவிடவே அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக ரயிலில் இருந்த காவலர்களிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து ரயில் டிரைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அடுத்த ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. ரயிலில் டிக்கெட் இன்றி ஏறியதற்காக ரூ.1020 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அப்துல் காதிர் ரயிலில் சிக்கிக் கொண்டதால் அவரது மனைவியும் மகனும் சிலிகுரி செல்லும் ரயிலில் ஏறாமல் ரயில் நிலையத்திலேயே காத்திருந்துள்ளனர். அவசர அவசரமாக உஜ்ஜைனில் இருந்து பேருந்தை பிடித்து போபால் வந்து இருக்கிறார். இதற்காக ரூ.750 டிக்கெட் எடுத்து அப்துல் காதிர் வந்துள்ளார். சிங்குரலியில் இருந்து போபால் செல்வதற்காக எடுத்து இருந்த டிக்கெட்டையும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்த முடியாமல் போனது. இப்படியாக மொத்தம் 6 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.